சென்னை ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்கள்..!
முதன்மை கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது - அன்பில் மகேஷ்சென்னை, ஐஐடி-யில் இந்தாண்டு பிஎஸ் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தில் 87 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்துள்ளனர்.
முன்னதாக, உலகின் முதல் இணைய வழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கடந்தாண்டு, இதனை கடந்த ஆகஸ்ட் மாதம் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (BS in Data Science and Applications) நான்காண்டுப் பட்டப் படிப்பாகவும் மாற்றம் செய்தது.
மேலும், , பிஎஸ் பட்டம் பெற்ற மாணவர்கள் GATE தேர்வு எழுதத் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எம்டெக் படிப்பைத் தொடரவோ அல்லது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவோ செய்யலாம் என்றும் அறிவித்தது.
இந்த பட்டப்படிப்பில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அதிகளவு சேரும் வகையில், தமிழக அரசுடன் இணைந்து அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மனப்பாடம் இன்றி கற்றல் திறமையை வெளிக்கொணரச் செய்யும் வகையில் அவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ்-ல் நேரடிப் பயிற்சி 14 வாரங்கள் அளிக்கப்பட்டு, பிஎஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வை எழுத 68 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், பிஎஸ் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, 75 சதவீதம் வரை வருமான அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. மேலும். தகுதியுடைய மாணவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) கூட்டு முயற்சியுடன் தமிழ்நாடு அரசின் முழு நிதைவியைப் பெற முடியும் என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மொய்யாமொழி இன்று கலந்து கொண்டார். பின்னர், பேசிய அவர், " தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 39 மாணவிகள் உள்பட 87 மாணாக்கர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முதன்மை கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியை சாத்தியமாக்குவதில் IIT மெட்ராஸ் BS பட்டப்படிப்பு திட்டத்தின் ஒத்துழைப்பை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment