லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இந்த சான்றிதழ் படிப்புக்கான கட்டணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது
Certificate Program in Applied Journalism:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து 6 மாத கால இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பினை வழங்க உள்ளது.
லயோலா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கட்டணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது. வெளியூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணச்செலவை மாணவர்கள் ஏற்க வேண்டும்.
காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தியரி வகுப்புகளும் பிற்பகல் முதல் மாலை 5 மணி வரை - தனித்திறன் செயல்பாடுகள், பயிற்சிகள், வாசிப்பு, படம்பிடித்தல் போன்ற செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர முடியும்.
6 மாத கால பயிற்சி படிப்பாக இது கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும் லயோலா கல்லூரியும் இணைந்து இந்த ஊடகவியல் படிப்புக்கான சான்றிதழை வழங்குகின்றன.
ஆன்லைனில் இந்த பயிற்சிக்காக முன் பதிவு செய்ய வேண்டிய முகவரி https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp
இச்சான்றிதழ் படிப்பிற்கு இம்மாதம் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment