Enormous Growth of Private Schools: UNESCO | தனியார் பள்ளிகளின் அபரிமிதமான வளர்ச்சி: யுனெஸ்கோ - Minnalseithi

Latest

Search This Blog

Monday, November 7, 2022

Enormous Growth of Private Schools: UNESCO | தனியார் பள்ளிகளின் அபரிமிதமான வளர்ச்சி: யுனெஸ்கோ

தனியார் பள்ளிகளின் அபரிமிதமான வளர்ச்சி: யுனெஸ்கோ



 கடந்த 2014 முதல், இந்தியாவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள, 97 ஆயிரம் பள்ளிகளில், 67 ஆயிரம் பள்ளிகள், தனியாரால் நிறுவப்பட்டுள்ளன. சிறந்த கல்வி சூழலுக்காக 73 சதவீத பெற்றோர், தனியார் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதாக, &'யுனெஸ்கோ&' வெளியிட்டுள்ள சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

  ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, &'யுனெஸ்கோ&' சார்பில், ஜி.இ.எம்.,- 2022 எனும் சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை: 

 தெற்கு ஆசிய நாடுகளில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் வைத்து, பொது மக்களுக்கு கல்வியை வழங்குவதற்கான பெரும்பாலான செலவினங்களை, அரசாங்கங்கள் ஏற்கின்றன. 

அதேபோல, குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக, பெற்றோர்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர்.இச்சூழலில், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கங்களுக்கு உள்ளது. அனைவருக்கும் நல்ல தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்வி வாய்ப்புகளிலும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். 

  னியார் பள்ளிகள் தெற்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் வலுவான இடத்தை பிடித்துள்ளன. 2019- - 20ம் ஆண்டில் மட்டும், அரசுப் பள்ளிகளில் நடந்துள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு இணையாக, தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளிலும் சேர்க்கை நடந்துள்ளது. இது, தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி உதவி பெறாத நிறுவனங்கள் வளர்ந்து வருவதை காட்டுகிறது. பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களால் விரும்பப்படும் சர்வதேச பள்ளிகளும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

 குறிப்பாக, இலங்கையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள், பொது பள்ளிகளாக இருந்தாலும், சர்வதேச பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, 2012 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. 

இந்தியாவில், 2014 முதல் நிறுவப்பட்ட 97 ஆயிரம் பள்ளிகளில், 67 ஆயிரம் தனியார் மற்றும் நிதி உதவி பெறாத பள்ளிகளாகும். இந்தியாவின் 5 மாநிலங்களில், 1,000க்கும் மேற்பட்ட, &'பட்ஜெட்&' தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூன்றில் இரண்டு பங்கு பள்ளிகள் தனி நபர்களால் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில், 80 சதவீத உரிமையாளர்கள், ஒரு பள்ளியை மட்டுமே வைத்துள்ளனர். 

  கொரோனா பாதிப்பு ஒருபுறம் தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைந்து உள்ள சூழலில், மறுபுறம் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு சென்ற மாணவ - மாணவியர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும், குடும்ப வருமானம் குறைந்ததாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்த பல மாணவர்கள், அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.

 இந்தியாவில், 2018ல் 33 சதவீதத்தில் இருந்த தனியார் பள்ளிகளின் சேர்க்கை விகிதம், 2021ம் ஆண்டில் 24 சதவீதம் ஆக குறைந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமான மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர். குறைந்த கட்டணம், வீட்டிற்கும் கல்வி நிறுவனத்திற்கும் இடையேயான தொலைவு மற்றும் தரம் ஆகியவையும், ஒரு பள்ளியை தேர்வு செய்வதற்கான பெற்றோரின் முடிவில், அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 பல தரப்பட்ட மொழி பின்புலங்களைக் கொண்ட மக்களுக்கான இணைப்பு மொழியாக மட்டுமின்றி, சமூக அந்தஸ்தும் ஆங்கில வழி கல்வியை தேர்வு செய்ய, ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பெரும்பாலான பெற்றோர், தனியார் கல்வி நிறுவனங்களை நாடுவதற்கான பின்புலத்தில், ஒரு நீண்ட காலனித்துவ வரலாறு மற்றும் உலகமயமாக்கலும் பிரதான காரணம் ஆகும். சிறந்த கல்வி சூழலுக்காக இந்தியாவில் 73 சதவீத பெற்றோர்கள், தனியார் கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 

 ஆங்கில வழி கல்விக்காக 12 சதவீதம் பெற்றோரும், அருகாமையில் அரசு பள்ளிகள் இல்லாத காரணத்தால் 10 சதவீதம் பெற்றோரும், தனியார் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் எட்டு நகரங்களில் உள்ள குறைந்த வருமானம் உள்ள 86 சதவீத குடும்பங்கள், மழலையர் கல்விக்காக மலிவான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.


Enormous Growth of Private Schools: UNESCO


 Since 2014, out of 97,000 newly established schools in India, 67,000 have been privately established. It has been stated in the international education monitoring report published by UNESCO that 73 percent of parents give priority to private education for a better educational environment.

  International Education Monitoring Report GEM- 2022 by UNESCO, the Educational, Scientific and Cultural Organization of the United Nations:

 In South Asian countries, governments bear most of the cost of providing education to the general public, considering social and economic development.

Similarly, parents also do their best to ensure that children get quality education. In this context, governments have the responsibility to provide quality education to all. Apart from providing good quality education to all, equality of educational opportunities should also be ensured.

  Private Schools Private educational institutions have a strong foothold in South Asian countries, particularly in India. In the year 2019-20 alone, parallel to the number of student admissions in government schools, admissions have also taken place in private and non-government aided schools. This shows that private companies and unfunded companies are growing. International schools preferred by the economically advanced population are also increasing significantly.

 In particular, enrollment in international schools has more than doubled between 2012 and 2019, despite more than 85 percent of schools in Sri Lanka being public schools. A notable feature is the growth of private schools charging low fees.

In India, out of 97 thousand schools established since 2014, 67 thousand are private and unaided schools. This has been found in a survey of more than 1,000 'budget' private schools in 5 states of India. Also, two-thirds of the schools are established by private individuals. Among them, 80 percent of the owners own only one school.

  In the environment where private schools are developing due to corona virus, on the other hand, the number of students who have gone from private schools to government schools is also significant. Due to the economic crisis caused by the corona virus and the decrease in family income, many students who studied in private educational institutions in India and Pakistan have shifted to government educational institutions.

 In India, the private school enrollment rate has declined from 33 percent in 2018 to 24 percent in 2021. Especially in the states of Andhra Pradesh, Kerala and Uttar Pradesh, more students have switched to government schools. Low fees, distance between home and educational institution and quality also have a greater influence on parents' decision to choose a school.

 Apart from being a bridging language for people from diverse linguistic backgrounds, social status is also an important reason for choosing English-medium education. A long colonial history and globalization are also the main reasons behind most parents resorting to private educational institutions. 73 percent of parents in India prefer private education for better educational environment.

 12 percent parents choose private schools for English medium education and 10 percent parents choose private schools due to non-availability of government schools nearby. 86 percent of low-income families in eight cities in India choose private schools that charge affordable fees for kindergarten education. This is stated in the report.

No comments:

Post a Comment