Engineering 2022-23 Sub Counselling | பொறியியல் 2022-23 துணை ஆலோசனை - Minnalseithi

Latest

Search This Blog

Friday, November 4, 2022

Engineering 2022-23 Sub Counselling | பொறியியல் 2022-23 துணை ஆலோசனை

பொறியியல் கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு தேதி அறிவிப்பு...



 Engineering 2022-23 Sub Counselling 


 மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பொறியியல் பி.இ./பி.டெக்., மாணாக்கர் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ளது.

 சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்ற, தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணாக்கர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.

 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் மாணாக்கர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.

 மாணாக்கர்கள் 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ள துணைக்கலந்தாய்வு அறிவிக்கையினை தொடர்ந்து, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 09.11.2022 - ம் தேதி முதல் 13.11.2022 - ம் தேதி வரை பதிவு செய்ய செய்யலாம். மேற்படி, மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Supplementary Consultation Date Notification for Unfilled Seats in Engineering Consultation...


 Engineering 2022-23 Sub Counselling


 Students have been given 5 days time to register their applications through the website. Tamil Nadu Engineering B.E./B.Tech., Student Admission 2022-23 for the unfilled seats at the end of general examination, supplementary examination advertisement notification is going to be published on 09.11.2022.

 Qualified students from Tamil Nadu who have passed the special supplementary examination and who have studied 12th standard academic and vocational education and those who are unable to participate in the general examination can participate in this supplementary examination and register through the website.

 Students will be directed to register online at 110 Engineering Admission Help Centers including Government and Government Aided Engineering Colleges, Multi-Technical Colleges, Arts and Science Colleges in all districts of Tamil Nadu.

 Students can register their applications through the website from 09.11.2022 to 13.11.2022 following the notification of sub-examination to be published on 09.11.2022. Accordingly, students have been given 5 days time to register their applications through the website.

No comments:

Post a Comment