4ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு | 4th phase engineering consultation completed - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, November 3, 2022

4ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு | 4th phase engineering consultation completed

4ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு


 54,000 இடங்கள் காலிபொதுப் பிரிவு கலந்தாய்வு 4கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக துணை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்விற்கு 10,000 பேர் வரை மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

 பொறியியல் கலந்தாய்வில் 4வது சுற்று முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 54,000 பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. 

 பொறியியல் படிப்பை பொறுத்தவரை 448 பொறியியல் கல்லூரிகளில் 1,39, 251 இடங்கள் உள்ளன. இவற்றுள் 85,216 இடங்கள் நிரம்பியுள்ளன. 54,035 இடங்கள் காலியாக இருக்கின்றன. கணினி அறிவியல்,தகவல் தொழில்நுட்பம் ,டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்துள்ளனர்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு 4கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக துணை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்விற்கு 10,000 பேர் வரை மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 துணை கலந்தாய்வில் 5ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என எதிர்பார்ப்பதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு 90,000 இடங்கள் வரை நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


4th phase engineering consultation completed


 54,000 seats vacancy general section consultation 4 phases have been completed and the next phase will be the supplementary consultation. Up to 10,000 students are expected to apply for the supplementary counselling

 As the 4th round of engineering consultation is over, 54,000 engineering posts are unfilled in Tamil Nadu. Special section counseling for engineering studies started on 18th August last. Following this, the public sector consultation started from 10th September and has been conducted in 4 phases and has now been completed.

 As far as engineering is concerned, there are 1,39,251 seats out of 448 engineering colleges. Out of these 85,216 seats are filled. 54,035 seats are vacant. Students have chosen more courses including Computer Science, Information Technology and Data Science.

As the 4 phases of general section consultation have been completed, the next phase will be the supplementary consultation. Up to 10,000 students are expected to apply for the supplementary counselling.

 The Engineering Admission Committee has said that it expects up to 5 thousand seats to be filled in the supplementary consultation. In that way, there is a chance to fill up to 90,000 seats this year.

No comments:

Post a Comment