இன்ஜி., துணை கவுன்சிலிங் 20ம் தேதி துவக்கம்
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான, துணை கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்குகிறது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது. பொது இட ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து, 707 இடங்களில், 84 ஆயிரத்து 812 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதம், 60 ஆயிரத்து 707 இடங்கள் காலியாக உள்ளன.
காலி இடங்களை நிரப்பும் வகையில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான &'ஆன்லைன்&' வழி விண்ணப்ப பதிவு, 9ம் தேதி துவங்கியது; நேற்று முன்தினம் முடிந்தது. வரும், 20ம் தேதி துணை கவுன்சிலிங் துவங்குகிறது.
அது தொடர்பான அறிவிப்பு:
துணை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், வரும், 18ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் குறைகள் இருந்தால் சரிசெய்ய, 19ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதன்பின், 20ம் தேதி முதல் பொது பாடப்பிரிவு, தொழிற்கல்வி ஆகியவற்றிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு பிரிவிலும், இடங்கள் ஒதுக்கப்படும்.
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டில காலியாக உள்ள இடங்கள், பட்டியலினத்தவருக்கு மாற்றப்பட்டு, 24 மற்றும் 25ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
வரும் 25ம் தேதியுடன் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முழுமையாக நிறைவடையும்.
கூடுதல் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment