வாட்ஸ் அப்-பில் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்க முடியாது..!! | WhatsApp can no longer 'screenshot' 'View Ones' photos..!! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, October 5, 2022

வாட்ஸ் அப்-பில் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்க முடியாது..!! | WhatsApp can no longer 'screenshot' 'View Ones' photos..!!

வாட்ஸ் அப்-பில் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்க முடியாது..!! 



 வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது. கலிபோர்னியா, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும். 

அந்த வகையில் வாட்ஸ் அப் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இனி வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

 இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வியூ ஒன்ஸ்' வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப்-பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 'வியூ ஒன்ஸ்' மூலம் வரும் புகைப்படங்களை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இந்த வசதி அறிமுகமானதில் இருந்து 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க பயனர்களுக்கு அனுமதி இருந்தது.

 ஆனால் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் புதிய வசதி அறிமுகமாக இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா சேனலின் சில ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த அம்சத்தை எப்போது பயன்படுத்த முடியும் என்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

No comments:

Post a Comment