UGC - NET தேர்வு முடிவுகள் வெளியீடு - மதிப்பெண்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Joint CSIR UGC - NET exam :
கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான Joint CSIR UGC - NET 2022 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பணிபுரியத் தகுதியான உதவி பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
Joint CSIR UGC - NET exam தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் 16- 18 தேதியில் தேர்வு எழுதியவர்களுக்கு வெளியாகியுள்ளது.earth, atmospheric, ocean and planetary sciences, physical sciences, mathematical sciences, life sciences, chemical sciences என்று 7 பாட பிரிவுகளில் Joint CSIR UGC - NET தேர்வுகள் நடத்தப்பட்டது.
தேர்வு எழுவதற்கு 2,21,746 பேர் பதிவு செய்த நிலையில் 1,62,084 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 166 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது Joint CSIR UGC - NET தேர்வுக்கான முடிவுகளை https://csirnet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.
அப்ளிகேசன் எண், பிறந்த தேதி மூலம் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், தேர்வு எழுதியவர் தெளிவுரை வேண்டுவோர் 011-4075 9000 என்ற தொலைப்பேசி எண்களையும், csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.
No comments:
Post a Comment