மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு ( எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் ) | Publication of Medical Consultation Schedule (MBBS/BDS) - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, October 6, 2022

மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு ( எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் ) | Publication of Medical Consultation Schedule (MBBS/BDS)

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 2022, அக்டோபர் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது2022-23 கல்வியாண்டிற்கான இளநிலை எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 2022, அக்டோபர் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats); 
மத்திய தொகுப்பு இடங்கள் (Central Pool Quota); மாநில தொகுப்பு இடங்கள் (State Government Quota Seats); 
மத்திய கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகம்; நிகர்நிலைப் பல்கலைக்கழகம்;
எய்ம்ஸ்/ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

  எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ்/பி.எஸ்.சி செவிலியர் படிப்புகள்:
15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும்.

அதேபோன்று, மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% மாநில ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்களின் (Competent Authority) பரிந்துரையின் படி அமையும். அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படி, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment