National Means cum Merit Scholarship scheme...Extension of date | நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...தேதி நீட்டிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, October 19, 2022

National Means cum Merit Scholarship scheme...Extension of date | நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...தேதி நீட்டிப்பு

தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 விண்ணப்பம் செய்வது எப்படி?


National Means cum Merit Scholarship scheme: 

அந்தந்த மாநில அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறதுNMCMSS for the year 2022-23: பொருளாதார ரீதியாக பின்தங்கிய நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேசிய கல்வி உதவித்தொகையை (National Means cum Merit Scholarship scheme) பெற விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் 2022 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 2022-23-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்பில் இடைநிறுத்தப்படுவதை தடுத்து, கல்வியை தொடர ஊக்குவிப்பதற்காக தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் உதவித்தொகையாக 12,000 ரூபாய் வரை பெறலாம். 

  அடிப்படைத் தகுதிகள்:
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியான மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் 7-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை: 
அந்தந்த மாநில அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

விண்ணப்பம் செய்வது எப்படி?
www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ் போர்ட் அளவு புகைப்படம்; வருமானச் சான்றிதழ்; ஆதார் எண்; வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC Code; புதுப்பிக்க, முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்.

 இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இந்த திட்டம் நூறுசதவீதம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment