எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை: கடைசி தேதியை நீட்டிக்க முடிவு?
ஆன்லைன் மூலமாக, சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள்) நேரடியாகவும் தங்கள் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். எம்பிபிஎஸ் , பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சில தினங்கள் கால அவகாசம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, 2022-23 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பல் மருத்துவம் இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளன.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 31 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் https://tnmedicalselection.net/Notification.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எவ்வாறாயினும், விண்ணப்பித்தார்கள் கடைசி நேரம் (இன்று மாலை 5 மணிக்குள்) வரை காலம் தாழ்த்தாமல் போதிய இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்:
ரூ.500 பட்டியலினர், பட்டியலின அருந்ததியினர், பழங்குடியினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்கள் கவனத்திற்கு:
ஆன்லைன் மூலமாக, சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள்) நேரடியாகவும் தங்கள் விண்ணப்பத்தினை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
THE SECRETARY,
SELECTION COMMITTEE,
DIRECTORATE OF MEDICAL EDUCATION,
162, PERIYAR E.V.R. HIGH ROAD,
KILPAUK,
CHENNAI – 600 010
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இடங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை நேரடியாக மட்டுமே மேலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment