சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை: அக்டோபர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
முன்னதாக, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி செப்டம்பர் 30 ஆக இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.சிறுபான்மை பள்ளிப்படிப்பு கல்வித் தொகை திட்டதின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 15.10.2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி செப்டம்பர் 30, ஆக இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி செய்வதற்கான வாய்ப்பு மற்றும் நிறுவன அளவிலான சரிபார்ப்பு (Institute Verification) அக்டோபர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான/மாநில அளவிலான/ மத்திய அமைச்சக அளவிலான சரிபார்ப்பு பணிகள் நவம்பர் 15ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்கள் பதிவேற்றும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு :
https://scholarships.gov.in/
பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை:
நாடு முழுவதும், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுமான்பை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 208-09ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 100% நிதியால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை நேரடி பணமாற்றம் மூலம் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுகிறது.
நிபந்தனைகள்:
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமான ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை:
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டொன்றுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 வரையிலும், கற்பிப்புக் கட்டணம் ரூ.3,500 (மாதம் 350- 10 மாதத்துக்கு) வரையிலும் வழங்கப்படுகிறது.
1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு, பராமரிப்புக்கு கட்டணமாக மாதம் 10 ரூ.100 வீதமும், 6ஆம் ஆம் வகுப்பு வரை வகுப்பு முதல் விடுதியில் தங்கி பயில்வோருக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
பாஸ் போர்ட் அளவு புகைப்படம்;
வருமானச் சான்றிதழ்;
சிறுபான்மையினர் என்பதற்கான வகுப்புச் சான்றிதழ்;
ஆதார் எண்;
வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC Code;
புதுப்பிக்க, முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் சாண்றிதழ்.
மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எனவே, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ/மாணவியர்கள் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு (புதியதாக/புதிப்பித்தல் ) கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment