கணினித் தமிழ் விருது | Kanini Tamil Award - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 23, 2022

கணினித் தமிழ் விருது | Kanini Tamil Award

ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம்... முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!


இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- 

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முதலமைச்சர் கணினித் தமிழ் விருது2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

 விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.மேலும் 2021ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022ஆம் ஆண்டுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

 இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குவந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2022 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 
முகவரிதமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை - 600 008 

 தொடர்புக்கான தொலைபேசி எண்கள்
044 - 28190412 / 044 - 28190413 

மின்னஞ்சல் 

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment