தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு! | Jobs in Tamil Nadu Fisheries Department... TNPSC Notification! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 30, 2022

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு! | Jobs in Tamil Nadu Fisheries Department... TNPSC Notification!

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!


தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஆய்வாளர் பிரிவில் காலியாக உள்ள 88 இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தேர்வு முறைகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

  தமிழ்நாடு மீன்வளத்துறை பணிக்கான விவரங்கள்:
காலியாகவுள்ள இடங்கள்: மீன்வளத்துறை ஆய்வாளர் பிரிவில் 64, துணை ஆய்வாளர் பிரிவில் 24 என மொத்தம் 88 இடங்கள் உள்ளன. 

  பணிக்கான கல்வித் தகுதி: 
ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியலில் டிகிரி அல்லது எம்.எஸ்சி.,(விலங்கியல் / உயிரியல்/ கடலோர மீன் வளர்ப்பு / கடலியல்), துணை ஆய்வாளர் பணிக்கு மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., (விலங்கியல் / மீன்வள அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.பணிக்கான வயது வரம்பு: 17.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. 

  ம்பளம் :
ஆய்வாளருக்கு ரூபாய். 37,700 முதல் 1,10,500 வரை. துணை ஆய்வாளருக்கு ரூபாய். 35,900 முதல் 1,13,500 வரை. ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முறை: ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும், பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 

  தேர்வுக்கான மையங்கள்:
சென்னை, மதுரை,கோவை,திருச்சி, திருநெல்வேலி, சேலம்,வேலூர். 

  தேர்வு நாள்:
மீன்வளத்துறை ஆய்வாளர் பணிக்கான தேர்வு நாள் 08.02.2023. காலை முதல் தாள் 9.30 முதல் - 12.30 மணி வரை நடக்கும். மாலை இரண்டாம் தாள் 2.30 முதல் - 5.30 மணி வரை நடக்கும். 

  மீன்வளத்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வு நாள்:
 07.02.2023. 
காலை முதல் தாள் 09.30 முதல் - 12.30 மணி வரை நடக்கும். மாலை இரண்டாம் தாள் 02.30 முதல் - 05.30 மணி வரை நடக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: 
 www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக நிரந்தர பதிவுக்கட்டணம் (ஓ.டி.ஆர்) ரூபாய்.150, தேர்வுக்கட்டணம் ரூபாய்.100. 

 மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை அணுகவும். 

  ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.11.2022 

  துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.11.2022.

No comments:

Post a Comment