ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ. | I.P.I.R.T.I. - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 25, 2022

ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ. | I.P.I.R.T.I.

அறிவோம் ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ. 


இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாட்டிற்கான மத்திய அமைச்சகத்தின் கீழ், பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தன்னாட்சி நிறுவனம், இந்தியன் பிளைவுட் இண்டஸ்ட்ரிஸ் ரிசர்ச் அண்டு டிரைனிங் இன்ஸ்டிடியூட்

  அறிமுகம் 
பிளைவுட் குறித்த பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ், ஒரு கூட்டுறவு ஆராய்ச்சி ஆய்வகமாக 1962ம் ஆண்டு &'இந்திய பிளைவுட் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம்- ஐ.பி.எம்.ஆர்.ஏ.,’ உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் 1970ல் &'இந்திய பிளைவுட் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி நிறுவனம் - ஐ.பி.ஐ.ஆர்.ஐ.,’ என அழைக்கப்பட்டது.

 பிறகு, பல்வேறு நிலை வளர்ச்சிக்கு பிறகு 1992ல் மெக்கானிக்கல் வுட் இண்டஸ்ட்ரீஸ் டெக்னாலஜிக்கான பயிற்சியில் அதன் முதன்மையான நிலையை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயர், &'இந்திய பிளைவுட் தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ.,’ என மாற்றப்பட்டது. 

  வளாகங்கள்:
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட இந்நிறுவனம், கொல்கத்தா மற்றும் மொகாலியில் மையங்களைக் கொண்டுள்ளது. 

  பயிற்சிகள் மற்றும் படிப்புகள்:
இத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினருக்கும் குறுகிய கால மற்றும் ஓரு ஆண்டு கால படிப்புகளையும் வழங்குகிறது. குறிப்பாக, ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கும் பிரத்யேக பயிற்சியை வழங்குகிறது. 

  முதுநிலை பட்டப்படிப்பு: 
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் இன் வுட் அண்டு பேனல் புராடெக்ஸ் டெக்னாலஜி 

  படிப்பு காலாம்:
ஓர் ஆண்டு 

  தகுதிகள்:
பி.எஸ்சி., - கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், மேத்மெடிக்ஸ், பாரஸ்ட்ரி, அக்ரிகல்ச்சர் , பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

 நவம்பர் 1ம் தேதியின் படி, 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறையின்படி விலக்கு உண்டு. 

  குறுகிய கால படிப்புகள்: 

பிளைவுட் மேனுபாக்ச்சரிங் டெக்னாலஜி பிரிவில் ஒரு மாத கால சிறப்பு திறன் வளர்ப்பு பயிற்சியையும், பல்வேறு பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. 

  விபரங்களுக்கு: https://ipirti.gov.in/

No comments:

Post a Comment