ஐ.ஐ.பி.எஸ்.,
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், மும்பையில் செயல்பட்டு வரும் மக்கள்தொகை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிக்கான பிரத்யேக கல்வி நிறுவனம் ஐ.ஐ.பி.எஸ்., எனும் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் பாபுலேஷன் சயின்சஸ்!
முக்கியத்துவம்:
கடந்த 1956ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட &'டெமொகிராபிக் டிரைனிங் அண்டு ரிசர்ச் சென்டர்’ எனும் டி.டி.ஆர்.சி., 1970ம் ஆண்டுகள் வரை இந்த பெயரில் செயல்பட்டுவந்தது. அதன்பிறகு, ஐ.ஐ.பி.எஸ்., என்று பெயர் மாற்றப்பட்ட இந்நிறுவனம் 1985ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றது.
மக்கள்தொகை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் வழங்குவதில் முன்னோடியான இந்நிறுவனம் ஏழு கல்வி துறைகளை கொண்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் ஆசிய, பசிபிக், ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இக்கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
வழங்கப்படும் படிப்புகள்:
* எம்.ஏ.,/எம்.எஸ்சி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்
* எம்.எஸ்சி., இன் பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி - எம்.பி.டி.,
* மாஸ்டர் ஆப் பாபுலேஷன் ஸ்டடீஸ் - எம்.இ.எஸ்.,
* பிஎச்.டி., இன் பாபுலேஷன் ஸ்டடீஸ்/ பயோ-ஸ்டடிஸ்டிக்ஸ் அண்ட் டெமோகிராபி
* போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப் - பி.டி.எப்.,
இவை தவிர, தொலைநிலை கல்வி முறை வாயிலாகவும் எம்.ஏ.,- பாபுலேஷன் ஸ்டடீஸ் படிப்பு வழங்கப்படுகிறது.
உதவித்தொகை:
படிப்பு நிலையை பொறுத்து, தகுதியான மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
முதுநிலை படிப்பில் சேர்க்கை பெற குறிப்பிட்ட துறைகளில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை ஐ.ஐ.பி.எஸ்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
விபரங்களுக்கு:
No comments:
Post a Comment