ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு -பத்தாவது முடித்தால் போதும் ! | Great job in Railways - just finish 10th ! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 30, 2022

ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு -பத்தாவது முடித்தால் போதும் ! | Great job in Railways - just finish 10th !

பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவரா? - ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு!


 சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலைகளில் (ICF) Scouts & Guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு.

தெற்கு ரயில்வே மற்றும் சென்னையிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் (ICF) Scouts & Guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது. 

காலியாகவுள்ள இடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, தேவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

  தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஃஎப் பணிக்கான விவரங்கள்:

பயிற்சி பெயர்
Scouts & Guides Quota Recruitment Level 1 & Level 2.

 காலியிடங்கள்
 ஐசிஃப் சென்னை - 3, 
தெற்கு ரயில்வே - 14 

சம்பளம்
ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.

 வயது
18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், எஸ்டி,எஸ்சி பிரிவினருக்கு தலா 5 வருடங்களும் சலுகை வழங்கப்படும். 

கல்வித்தகுதி
10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சாரண சாரணியர் தகுதி: 
மேற்கண்ட கல்வித்தகுதியுடன் சாரண சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 வருடங்கள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில்/மாநில அளவில் நடைபெற்ற இரண்டு சாரண சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 

 தேர்ந்தெடுக்கப்படும் முறை:
 எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சாரண சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்:
விண்ணப்பக் கட்டணம்: 
Gerenal / OBC பிரிவினர்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள். சிறுபான்மையினர்களுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை DD அல்லது IPO ஆகச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி: தலைவர், ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல், சென்னை. 

  விண்ணப்பிக்கும் முறை:
என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு அறிவியல் மற்றும் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் சுய அட்டஸ்ட் நகல்களை இணைத்து 08.11.2022 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும். 

  அனுப்ப வேண்டிய முகவர்:
தலைவர், 
ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல், 
தெற்கு ரயில்வே, 
எழும்பூர், 
சென்னை - 600 008. 

 The Chairman, 
Railway Recruitment Cell, S
outhern Railway, 
Egmore, 
Chennai - 600 008. 

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.11.2022 மாலை 5 மணி வரை.

No comments:

Post a Comment