அக்., 29ல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவக்கம்
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, வரும் 29ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்குகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவிய
ல் பல்கலையின், 2022 - 23ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு என்ற பி.வி.எஸ்சி., அண்டு ஏ.ஹெச்., படிப்புக்கு, 517 இடங்கள் உள்ளன.
அதேபோல், பால்வளம், கோழியினம், உணவு ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு 134 இடங்கள் உள்ளன.
இவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 13 ஆயிரத்து 470; தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2,744 என, மொத்தம் 16 ஆயிரத்து 214 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு adm.tanuvas.ac.in, tanuvas.ac.in என்ற இணையதளங்களில், நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்திரசேகர், ஈரோட்டைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தர்மபுரியைச் சேர்ந்த ஹரினிகா ஆகியோர், 200க்கு 200 மதிப்பெண் பெற்று, தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
தொழில்நுட்ப படிப்பில், செங்கல்பட்டைச் சேர்ந்த சுபா கீதா, 200க்கு 199.50 மதிப்பெண் பெற்று, முதல் இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த அஸ்வின், 198 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, 196.50 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும் 29ம் தேதி முதல் துவங்குகிறது.
அதன்படி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி கவுன்சிலிங், 29ம் தேதி, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 29ம் தேதி காலை 10:00 மணி முதல் 31ம் தேதி, மாலை 5:00 மணி வரை adm.tanuvas.ac.in, tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் இடங்களை தேர்வு செய்து பதிவு செய்யலாம். இதற்கான முடிவுகள், நவ., 2ம் தேதி வெளியிடப்படும். இடங்களைப் பெற்ற மாணவர்கள், நவ., 11ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் சேர வேண்டும்.
2,654 பேர் போட்டி!
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில், 44 இடங்கள் உள்ளன. அதேபோல், தொழில்நுட்ப படிப்புகளுக்கு எட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 2,654 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு &'ஆன்லைன்&' முறையில், 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவு நடக்கிறது.
நவ., 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு, 11ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என, கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment