7.5% ...565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் | 7.5% ...565 seats in medical courses for government school students - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, October 20, 2022

7.5% ...565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் | 7.5% ...565 seats in medical courses for government school students

மருத்துவ கலந்தாய்வு:

7.5% ஒதுக்கீட்டின் கீழ் 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்


7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 565 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.2022-23 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு ஆணைகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். 

 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 2022-2023ம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவம் / பல் மருத்துவம் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவம் பல் மருத்துவம் இடங்கள் சேருவதற்கான 7.5% அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 2695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 இதில், 2674 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் 764 பேரும், பெண் விண்ணப்பதாரர்கள் 1910 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவத்திற்கு (MB8S) 459 இடங்களும், பல் மருத்துவத்திற்கு (BDS) 106 இடங்கள் என ஆக மொத்தம் 565 இடங்கள் உள்ளது.இன்று, 1195 மாணவ மாணவிகள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு 565 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டது.

 இந்த மாணவர்களுக்கு மருத்துவ ஆணைகளை வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார்., மருத்துவக் கல்வி தேர்வுக் குழுத் செயலாளர் மருமுத்துச்செல்வன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Medical consultation:

565 govt school students seats in medical course under 7.5% quota


565 seats have been filled in Government Medical Colleges for 7.5% Quota and Self-Finance Medical Colleges under Government Quota. State Health Minister M.Subramanian has issued 7.5% Internal Quota Orders to the students of Medical (MBBS) and Dentistry (BDS) in Government School for the year 2022-23.

 In a press release issued in this regard, 2695 applications have been received for the 7.5% internal quota of government school educated students for admission to government medical/dental seats in self-financed colleges for medical (MBBS) and dental (BDS) courses for the year 2022-2023.

 Out of this, 2674 applications were accepted. Out of which 764 male candidates and 1910 female candidates had applied. There are 459 seats for Medicine (MB8S) and 106 seats for Dentistry (BDS) in Government Medical Colleges for 7.5% quota and Self-financed Medical Colleges under Government quota, totaling 565 seats. Today, 1195 students have been called for counseling and 565 Medical and Dental seats have been filled.

 The event of awarding medical orders to these students was held at the Tamil Nadu Government Pannoku High Specialty Hospital compound in Omanturar Government Estate. In this event, it was informed that the Principal Secretary of the Department of Medicine and Public Welfare, Dr. P. Senthilkumar, the Secretary of the Medical Education Examination Committee, Marumuthuchelvan and other senior officials were present.

No comments:

Post a Comment