நரை முடி ,கருப்பாக மாற 7 நாள் இத பண்ணுங்க | Do this for 7 days to turn gray hair black - Minnalseithi

Latest

Search This Blog

Monday, October 24, 2022

நரை முடி ,கருப்பாக மாற 7 நாள் இத பண்ணுங்க | Do this for 7 days to turn gray hair black

7 நாட்கள் மட்டும் இதை பயன்படுத்தினால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்: 

ஸ்டேப்:1 
முதலில் எண்ணெய் செய்வதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகம் தேவையான அளவு, மருதாணி இலை 1 கைப்பிடி, கரிசலாங்கண்ணி இலை, தேங்காய் எண்ணெய் 200 ml போன்றவை தேவையான பொருட்கள்.(கரிசலாங்கண்ணி இலை கிடைக்கவில்லை என்றால் கடையில் கரிசலாங்கண்ணி பொடி கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள்)

ஸ்டேப்:2 
முதலில் கருஞ்சீரகம் அரைத்து கொள்ளுங்கள். பின் மருதாணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். பின் கரிசலாங்கண்ணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். மூன்று பொருட்களையும் தனி தனியாக அரைத்து கொள்ளுங்கள். 

  ஸ்டேப்:3 
பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் 200 ml தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் குறைவான தீயிலே வையுங்கள். 

  ஸ்டேப்:4
பின் அரைத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம் பொடியை சேருங்கள். பின் கருஞ்சீரகம் கொதித்த பிறகு அரைத்த மருதாணியை சேருங்கள். மருதாணி இலையை சேர்த்த பிறகு எண்ணெய் பொரிந்து காணப்படும். 

  ஸ்டேப்:5
இந்த எண்ணெய் பொரிந்து முடித்த பிறகு அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இதனை சேர்த்த பிறகு எண்ணெய் கருப்பாக மாறிவிடும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். 

  ஸ்டேப்:6 
எண்ணெய் சூடு ஆறியதும் வடிகட்டி வைத்து வடிக்கட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய பிறகு பாத்திரத்தின் கீழ் எண்ணெய் மட்டும் தங்கியிருக்கும். இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்தும் முடியை கருப்பாக மாற்ற கூடிய சக்தி உள்ளது. 

  ஸ்டேப்:7 
இந்த எண்ணையை தினமும் காலையில் தடவுங்கள். இல்லை என்னால் காலையில் தடவ முடியாது என்றால் இரவு தூங்குவதற்கு முன் தடவி கொண்டு தூங்குங்கள். 

காலையில் எழுந்ததும் நீங்கள் எப்பொழுதும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளித்து விடலாம். இது போல் தொடர்ந்து 7 நாட்கள் தேய்த்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும். புதிதாக வளர்கின்ற வெள்ளை முடியையும் வளர விடாமல் தடுத்து விடும்.

No comments:

Post a Comment