பி.எட் பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிஎட் பட்டப்படிப்பு
அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.2022-23 கல்வியாண்டிற்க்கான பி.எட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பி.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி ரேங்க் பட்டியலும் அக்டோபர் 12ஆம் தேதி கலந்தாய்வு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியலறிவு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பிஎட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மேற்காணும் படத்தில், முதல் 10 பாடப் பிரிவுகளுக்கு, தொடர்புடைய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் பிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 11 முதல் 19 வரையிலான பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
No comments:
Post a Comment