‛நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அரசு பள்ளிகளில் ஏற்பாடு | Special Coaching for NEET: Arrangements in Government Schools - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 17, 2022

‛நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அரசு பள்ளிகளில் ஏற்பாடு | Special Coaching for NEET: Arrangements in Government Schools

‛நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அரசு பள்ளிகளில் ஏற்பாடு



 தனியார் நிறுவனங்களை போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில், தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில், 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி, 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 51 சதவீதம். அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 23 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சியை அதிகரிக்க, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, நாடு முழுதும் நீட் பயிற்சியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் ஆசிரியர்களை நியமித்து, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த பயிற்சி, அடுத்த மாதம் முதல் துவங்கப்பட உள்ளது. தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் போல், அரசு பள்ளி மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Special Coaching for NEET: Arrangements in Government Schools


 The school education department has decided to give special coaching to government school students for the 'NEET' exam, just like private institutes. Students who have completed Plus 2 must clear the 'NEET' entrance exam to get admission in medical courses.

In this year's NEET exam, 56 percent passed the national level. In Tamil Nadu, 1.32 lakh people appeared for the exam and 68 thousand passed. This is 51 percent. As for government school students, only 23 percent passed. The school education department has planned to increase the NEET pass of government school students in the coming academic year.

For this, the teachers of the institutes leading in NEET training across the country will be appointed and training will be provided to the Tamil Nadu government school teachers. Trained teachers will provide intensive training to government school students.

The training will start from next month. School education officials said that government school students are likely to score higher in the NEET exam from next year, as compared to students trained in private institutes.

No comments:

Post a Comment