தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பணியாளர் பணி:
https://www.pexels.com/photo/girl-in-white-long-sleeve-shirt-sitting-beside-a-person-in-black-shirt-8205411/
விண்ணப்பம் வரவேற்புதொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது.சமூக பணியாளர்தூத்துக்குடி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் (Child Protection Unit) சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மாதம் ஒன்றிற்கு ரூ.18536/- வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது :
10,12ம் வகுப்புடன் பட்டதாரி/முதுநிலைப் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்;
சமூகப்பணி/சமூகவியல் / சமூக அறிவியில் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.குழந்தை தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணிபுரிந்திருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.
கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது:
40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள், www.thoothukudi.nic.in என்ற மாவட்ட இணையதளத்திலிருந்து இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் 30.09.2022 அன்று மாலை 05.30-க்குள் பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
முகவரி,
மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகு,
176, முத்துச் சுரபி பில்டிங்,
மணிநகர், 2வது தெரு,
பாளை ரோடு,
தூத்துக்குடி 628003,
தொலைபேசி எண்: 0461 - 2331188
எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.
No comments:
Post a Comment