RTE கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு? | Fee paid by the gov. to the students who join private schools under RTE - Minnalseithi

Latest

Search This Blog

Friday, September 2, 2022

RTE கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு? | Fee paid by the gov. to the students who join private schools under RTE

RTE கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு? கல்வித்துறை தகவல் 


 கல்வி பயிலும் மாணவிகள் கல்வி பயிலும் மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.380 முதல் ரூ.1,360 வரை கட்டணத்தை குறைத்து தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 நடப்பு கல்வியாண்டில் இலவச கட்டாய கல்லி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.) 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ-மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. அந்தவகையில், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

 அதன்படி, 1முதல் 5-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர் ஒருவருக்கு 12,076.85 காசு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதேபோல் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேருபவர்களுக்காக 15,711. 31 காசு நிர்ணயம் செய்திருந்தது. 

 இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், கடந்த ஆண்டை விடகட்டணத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.380 முதல் ரூ.1,360 வரை கட்டணத்தை குறைத்து தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

How much is the fee paid by the government to students who join private schools under RTE? Education Information


 It is noteworthy that the government has reduced the fee for female students from Rs.380 to Rs.1,360 this year compared to last year.

 The Department of School Education has released the details of the fees paid by the government to students enrolled in private schools under the Free Compulsory Enrollment Act in the current academic year.

 Under the Right to Free and Compulsory Education for Children (RTE) Act, students from class 1 to 8 are enrolled in private schools every year. The government pays the fees for the students who enroll in the private schools. In this way, the school education department has released the details of how much the government will pay for the students enrolled in private schools in the current academic year.

 Accordingly, 12,076.85 per student enrolled in class 1 to 5 has been fixed. 15,711 for those entering classes 6th, 7th and 8th. 31 had fixed Rs.

 While the private schools have been demanding to increase the tuition fees for the students enrolled under this law, the school education department has announced a reduction in the tuition fee last year.

Accordingly, it is noteworthy that the government has reduced the fee from Rs.380 to Rs.1,360 to private schools this year compared to last year.

No comments:

Post a Comment