சிறந்த இலக்கிய படைப்புக்குஉதவி தொகை பெற வாய்ப்பு | Opportunity to receive grants for outstanding literary work - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 4, 2022

சிறந்த இலக்கிய படைப்புக்குஉதவி தொகை பெற வாய்ப்பு | Opportunity to receive grants for outstanding literary work

சிறந்த இலக்கிய படைப்புக்குஉதவி தொகை பெற வாய்ப்பு 

\


சிறந்த இலக்கிய படைப்புகளை வெளியிட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் உதவித் தொகையை பெற, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், ஆண்டுதோறும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை வெளியிட தலா 1 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களில் ஒன்பது பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரச்னைகளை எழுதும், ஆதிதிராவிடர் அல்லாத இருவர் தேர்வு செய்யப்படுவர். 

 எழுத்தாளர்களுக்கான வயது வரம்பு இல்லை.கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, புதினம் ஆகியவற்றில் எதுவாகவும் இருக்கலாம். படைப்பு தமிழில் இருக்க வேண்டும். பிற மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட, சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம்.

 இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும், வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள்.

Opportunity to get grant for best literary work


To publish the best literary works, Adi Dravidar and Tribal Art and Literature Development Society should apply for the grant by the 30th.

 On behalf of the Adhiravidar and Tribal Arts and Literature Development Association, 11 best literary works are selected annually and a grant of Rs 1 lakh each is given for their publication.

 In this, nine Adhi Dravidians, tribals, converted Adhi Dravidian Christians and two non-Adhi Dravidians who will write on Adhi Dravidian and tribal issues will be selected.

 There is no age limit for writers. It can be anything from story, essay, poetry, history, novel. The work should be in Tamil. It can also be a great Tamil work translated from other languages.

 Applications for this can be obtained from District Adi Dravidar and Tribal Welfare Offices and Directorate of Adi Dravidar Welfare on working days. It can also be downloaded from the website tn.gov.in. Last date to apply is 30th of this month.

No comments:

Post a Comment