அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி | A new initiative by the School Education Department to attract students towards government schools - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 6, 2022

அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி | A new initiative by the School Education Department to attract students towards government schools

தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள்: அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி






 தகைசால் பள்ளிகள்தகைசால் பள்ளிகள் வரும் ஆண்டுகளில் மாவட்டத்தில் ஒரு மாதிரிப்பள்ளி என்கிற அடிப்படையில் மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

 அந்த வகையில் 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது. ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. 

அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும் , இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

 ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

 அந்தவகையில் முதற்கட்டமாக திருவள்ளூர், சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு , இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் , விழுப்புரம் ,தருமபுரி ,சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் , திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது . உண்டு, உறைவிட வசதியுடன் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. 

10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு விளையாட்டுகள், கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்குரிய தகுதியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 அந்த வகையில், இந்த கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்படுகிறது. 

நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்புவோரை பிடிக்க தனி குழு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. வரும் ஆண்டுகளில் மாவட்டத்தில் ஒரு மாதிரிப்பள்ளி என்கிற அடிப்படையில் மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment