நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது..! | NEET results will be released the day after tomorrow..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 6, 2022

நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது..! | NEET results will be released the day after tomorrow..!

நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது..!


 நீட் தேர்வு முடிவுகள் நீட் தேர்வு முடிவுகள் தமிழ்கத்தில் மொத்தம் 10725 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 5500 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 5225 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட இருக்கின்றன.

 தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91,000க்கும் அதிமான எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 26773 பிடிஎஸ் இடங்களுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

 எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன. மொத்த இடங்களில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு ஆகும். மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இதன் கீழ் நடைபெறும். இந்த 15% மாணவர் சேர்க்கையில், இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படும். 

அதன்படி, 10% இடங்கள் பொது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கும் (GEN-EWS) 15% இடங்கள் பட்டியல் பரிவனருக்கும் (SC), 7.5% பட்டியல் பழங்குடியினருக்கும் (51) மற்றும் 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC-NCL) ஒதுக்கப்படும். இதற்கான கலந்தாய்வை, மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும். மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில/நிர்வாக/ வெளிநாட வாழ் இந்தியர்கள் தொகுப்பு இடங்கள் (State/Management/NRI Quota Seats in Private Medical Colleges) உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளும். 

இதில், அந்தந்த மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். தமிழ்கத்தில் மொத்தம் 10725 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 5500 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 5225 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. தனியார் கல்லாரிகளில் உள்ள எஞ்சிய இடங்களில், 50% இடங்கள் அரசு கல்லூரிக்கு இணையான நியாமானம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். 

 தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? 

 neet.nta.nic.in, nta.ac.in , ntaresults.nic.in ஆகிய இணைய தளங்களில் வழியாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 

 தயக்கம் ஏன்? 

 நாட்டில் உள்ள 75% எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களுக்கு நியாமான கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. மேலும், நீட் தேர்வெழுதுவதற்கு வயது தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மாணவர்கள் பயன்படும் வகையால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தான் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெளிவுடுத்தியுள்ளது. 2022-23 கல்வியாண்டில், பொறியியல் பட்டயப் படிப்பிற்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளன.

 இதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடங்களும், இதர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மேலும், IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் மாநில அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 மேலும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம், உயர்க்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு Robotics, Virtual Reality, oracle, Machine learning, Cloud Computing, Artificial Intelligence, Cyber Security, Internet of Things போன்ற நவீன கூடுதல் பிரிவுகளை இலவசமாகவும், மிகக் குறைவான கட்டணத்தில் பயிலும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment