காஞ்சிபுரம் பட்டு முதல் பாரம்பரிய தின்பண்டங்கள் வரை.. இனி ரயில் நிலையங்களிலேயே வாங்கலாம்
இதில் பங்கேற்க விரும்பும் பங்கேற்பாளர்கள், சம்பந்தப்பட்ட நிலையத்தின் மேலாளரை அணுக வேண்டும் அல்லது சென்னை கோட்டத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவை (Business Development Unit தொடர்பு கொள்ள வேண்டும்மக்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, ஒரு நிலையம், ஒரு பொருள் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் மூலம், குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள பிரபலமான பொருட்கள் ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும்.
இந்நிலையில், சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பங்கேற்பாளர்களின் தகுதி வரம்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் :
கைத்தறி வளர்ச்சி ஆணையரால் வழங்கப்பெற்ற அல்லது உரிய மாநில/மத்திய அதிகார அமைப்பினரால் வழங்கப்பெற்ற கைவினைஞர் அட்டை/நெசவாளர் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம்தனிப்பட்ட கைவினைஞர் / நெசவாளர் / கைவேலைப்பாட்டு கலைஞர் ஆகியோர் பழங்குடியினர் கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி பெடரேஷன் லிமிட்டட் உடன் தேசிய கைத்தறி வளர்ச்சி கார்ப்பரேஷன் உடன் / கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து பதிவு பெற்றுள்ளவராக இருத்தல் அவசியம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் (PMEGP) பதிவு பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் ஆக இருத்தல் வேண்டும்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அல்லது பலவீனமான பிரிவைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்பும் பங்கேற்பாளர்கள், சம்பந்தப்பட்ட நிலையத்தின் மேலாளரை அணுக வேண்டும் அல்லது சென்னை கோட்டத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவை (Business Development Unit தொடர்பு கொள்ள வேண்டும்.
பதிவுக் கட்டணம் ரூ. 1000/- இறுதி செய்யப்படும் தருணத்தில் அந்தந்த நிலையத்தில் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment