ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உணவு திருவிழா!
நாமக்கல் மாவட்டம் ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊட்டச்சத்து வாரத்தினை கொண்டாடும் வகையில், அப்பள்ளி மாணவர்கள் உடலுக்கு சத்தான உணவுகளான பாரம்பரிய உணவுகளை செய்து உணவுத் திருவிழா போல் கொண்டாடினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கும் நீண்ட காலம் வாழ்வதற்கும் நன்மைகளைக் கொடுக்கும். மக்களிடையே இதுபற்றி போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
ஏனெனில் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் மக்கள் தங்களுடைய பணிகளை மட்டும் கவனித்துக் கொண்டு உணவுமுறைகளை பின்பற்றுவதில்லை.
அந்த வகையில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டிபாளையத்தில் ஊட்டச்சத்து வாரத்தினை கொண்டாடும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் 45 மாணவர்கள் மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகளான கம்மங்கூழ், கேழ்வரகு, புட்டு அரிசி, புட்டு பிரண்டை துவையல், கொள்ளு பொரியல், உளுந்தங்கஞ்சி, போன்ற பதார்த்தங்களை கொண்டு வந்தனர்.மாணவர்கள் ஒவ்வொரு உணவுகளின் சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வையும், மேலும் மாணவர்கள் பழங்கள் போல வேடமிட்டு அதன் சத்துக்களையும் எடுத்துக் கூறினார்கள்.
மாணவர்கள் உடல் எடைக்கு ஏற்ப நீர் அருந்தும் முறை, மன நலனை பாதுகாக்க யோகா மற்றும் உடற்பயிற்சி சரிவிகித உணவு மற்றும் உணவு கோபுரம் பற்றி எடுத்துரைத்தனர்.
இந்த உணவு திருவிழாவை தலைமை ஆசிரியர் திருமதி. கிருஷ்ணம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள், RTS program மற்றும் HLFL நிர்வாகி திருமதி கல்பனா பெ ஆகியோர் இணைந்து நடத்தினர். இதன்மூலம் மாணவர்கள் சத்தான பாரம்பரிய உணவு பற்றிய தெரிந்துக் கொண்டனர்.
Antipalayam Panchayat Union Primary School Food Festival!
In order to celebrate the Nutrition Week at Antipalayam Panchayat Union Primary School in Namakkal District, the students of the school prepared traditional foods that are nutritious for the body and celebrated like a food festival.
Every year the first week of September is observed as National Nutrition Week. A nutritionally balanced and nutritious diet benefits our health and longevity. Adequate awareness should be created among the people.
Because in the current era people are not following diets just taking care of their work. In order to create awareness about this, a food festival was held in Panchayat Union Primary School Andipalayam in Namakkal district to celebrate the Nutrition Week.
In this, 45 students brought traditional food like kammangoo, kelvaraku, puttu arisi, puttu brandai duayyal, kollu fryal, uluthanganji, etc. Students created awareness about the nutrients of each food, and students dressed up as fruits and took its nutrients.
Students were taught about water intake according to body weight, yoga and exercise to protect mental health, balanced diet and food tower. This food festival was organized by the head teacher Mrs. Krishnammal and co-facilitators, RTS program and HLFL Administrator Ms. Kalpana Beh co-hosted. Through this students learned about nutritious traditional food.
No comments:
Post a Comment