முதுகலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு CUET PG Exam 2022: தேசிய தேர்வு முகமையின் cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
முதுநிலை படிப்புக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 5 மணியளவில் முடிவுகள் வெளியானது. தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இணையதளத்தை அணுகியதால், தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு இணைய தளம் முடங்கியது.
சில நிமிடங்களில் இது மீண்டும் செயல்பட தொடங்கியது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET - PG தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தன.
டெல்லி பல்கலைக்கழகம், ஜமியா உள்ளிட்ட 22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை வரும் கல்வியாண்டில் வழக்கம் போல் பழைய முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவித்தன.
நாடு முழுவதும், கடந்த செப்டம்பர் 1 முதல் 12ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது . 6,லட்சத்து ,7648 பேர் விண்ணப்பித்த நிலையில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 997 பேர் தேர்வுகளை எழுதினர்.
மேலும், உத்தேச விடைத்தொகுப்.பு (Provisional Answer keys) தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் (Scanned Images of OMR Answer Sheet & Recorded Responses) கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி:
தேசிய தேர்வு முகமையின் cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
cucet@nta.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
No comments:
Post a Comment