Chance of very heavy rain in 10 districts today 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, September 1, 2022

Chance of very heavy rain in 10 districts today 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கடலூர் கோவை மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (செப்.,1) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கடலூர் கோவை மற்றும் டெல்டா ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (செப்.,1) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல் ஈரோடு, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

நாளை(செப்.,02) : நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, , திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெ ப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைக்குடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வே கத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்களுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The Chennai Meteorological Department has announced that 10 districts namely Nilgiris, Theni, Tirupur, Dindigul, Cuddalore, Coimbatore and Delta districts are likely to receive very heavy rains today (September 1). Chennai Meteorological Center Director Sentamarai Kannan has said in a statement:

Due to the upper atmospheric circulation over North Tamil Nadu and adjoining areas, 10 districts namely Nilgiris, Theni, Tirupur, Dindigul, Cuddalore Coimbatore and Delta are likely to receive very heavy rains today (September 1). , Dindigul, Madurai, Erode, Namakkal, Karur, Dharmapuri, Krishnagiri, Tirupattur, Madurai, Thoothukudi, Tirunelveli, Kanyakumari and Perambalur, Ariyalur districts may receive heavy rain at one or two places.

Tomorrow (Sep.02) : Nilgiris, Coimbatore, Theni, Tirupur, Erode, Krishnagiri, Dharmapuri, , Dindigul and Salem districts are likely to receive heavy rain. Light to thundershowers with thundershowers at isolated places from today for four days in Tamil Nadu, Puducherry and Karaikal. Moderate rain likely. The sky will be cloudy for Chennai. Light to moderate rain accompanied by thundershowers may occur over some parts of the city. The maximum temperature will be around 34-35°C and the minimum temperature will be around 26°C.

Cyclonic winds of 40 to 50 kmph are likely to occur over the Kumari Sea, Gulf of Mannar, coastal areas of Tamil Nadu and South West Bay of Bengal adjacent to Sri Lanka. Cyclonic winds may blow at a speed of 45 to 55 kmph over Kerala-Karnataka coastal areas, Lakshadweep-Maldives areas and adjoining Arabian Sea areas. Fishermen are advised not to go to these areas today. This is stated in the report.

No comments:

Post a Comment