மாணவர்கள் குறைவாக இருந்தால் பாடப்பிரிவுகளை ரத்து செய்க - பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது11,12ம் வகுப்புகளில் குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்து விட்டு, அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்புக் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது குறித்து முக்கிய செயல்முறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.
அதில், நடப்புக் கல்வியாண்டில், 31.8.2022 அன்று EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், 11,12ம் வகுப்புகளுக்கு 1:40 என்ற என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி/மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுவதாகவும், குறைந்த பட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment