7.5% இட ஒதுக்கீடு; மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75% முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி
அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை மேலும் அதிகரிப்பதற்கு சிறப்பு வகுப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.7.5 விழுக்காட்டின் கீழ், மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினர், முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் சதவீதம் கணிசமாக குறைந்தது.
இதனை அடுத்து மருத்துவ படிப்பில் 7.5% சதவிகிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு 350 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தனர்.
அந்த வகையில் 2020ம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் , அரசு பள்ளி மாணவர்கள் 350 பேர் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தனர். அவர்கள் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி முடித்திருக்கின்றனர்.
இதில் 75 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் அல்லாத மாணவர்களில் 85 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குனராக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை மேலும் அதிகரிப்பதற்கு சிறப்பு வகுப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
7.5% சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு என்ற அரசின் முடிவு வெளியான பின்னர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான சுமையை தாங்குவார்களா என்கிற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேராததை சுட்டிக்காட்டி இட ஒதுக்கீடு காரணமாக மட்டுமே மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வது சாத்தியமாகி இருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன .
மேலும் இவ்வாறு சேரும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறுவார்களா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தற்போது முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களில் 75% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு வழங்கியுள்ள 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டு வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவம் பயில தொடங்கி இருக்கின்றனர் என்பது இந்த முடிவுகள் மூலம் தெளிவாகி இருக்கின்றது.
வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மூலமே எதிர்கால சமுதாயத்தின் திறன்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலைக்கேற்ப மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்பை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் என்பது இதன் மூலமாக உறுதியாகின்றது.
7.5% reservation; 75% of government school students enrolled in medical courses pass the first year exam
Medical education sources have also informed that measures have been taken to further increase the passing percentage of government school students through special classes. Under 7.5 percent, 75 percent of the government school students enrolled in medical studies have passed the first year examination. The percentage of government school students joining government schools has decreased significantly due to NEET exam.
Following this, 7.5% seat reservation was given to government school students in medical courses. In that way last year 350 students joined the MBBS course. In that way, at the end of 2020, for the first time, 350 government school students were enrolled in medical courses under the 7.5 percent reservation. They have completed their first year examination.
Sources said that 75 percent of students have passed and 85 percent of non-government school students have passed. Medical education sources also said that steps have been taken to further increase the pass percentage of government school students through special classes.
After the announcement of the government's decision to allocate 7.5% special seats to students in medical studies, the question whether government school students will bear the burden of medical studies has been raised from various quarters. In the past, it was pointed out that government school students did not enroll in large numbers and it was suggested that it was possible for government school students to enroll in medical courses only because of seat reservation.
Also, the question was raised whether the students who enroll in this way will pass the medical course. Currently, the details of the first year exam results are out. Out of which 75% of the students enrolled in the 7.5% quota have passed. In that way, it is clear from these results that government school students are realizing the importance of the 7.5% special reservation opportunity provided by the government and are starting to study medicine.
Through this, it is confirmed that the students are starting to use the opportunity provided by Tamilnadu government through 7.5 percent reservation for the students in accordance with the condition that the skills of the future society can be known by creating opportunities.
No comments:
Post a Comment