நீட் தேர்வில் பின்தங்கிய தமிழ்நாடு: தேர்ச்சி விகிதம் 51.30% ஆக சரிவு | Tamil Nadu lags behind in NEET: pass rate falls to 51.30% - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, September 8, 2022

நீட் தேர்வில் பின்தங்கிய தமிழ்நாடு: தேர்ச்சி விகிதம் 51.30% ஆக சரிவு | Tamil Nadu lags behind in NEET: pass rate falls to 51.30%

நீட் தேர்வில் பின்தங்கிய தமிழ்நாடு: தேர்ச்சி விகிதம் 51.30% ஆக சரிவு 



நீட் தேர்வு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில், இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை பெற்று தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. 

2020-ல் 57.44 சதவீதமாகவும், 2021-ல் 54.40 சதவீதமாகவும் இருந்த தேர்ச்சி விகிதம் நடப்பு கல்வியாண்டு 2022-ல் 51.30% ஆக குறைந்துள்ளது. 2022 ஆண்டிற்கான நீட் நுழைவு தகுதித் தேர்வு தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது. நாடு முழுவதும் 17 லட்சத்துக்கும் (1764571)அதிகமான மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் 91,000க்கும் அதிமான எம்பிபிஎஸ் இடங்களும், 313 பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 26773 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. கிட்டத்தட்ட 1,17,773 மருத்துவ இடங்களே உள்ள நிலையில், 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும், 48012 இடங்கள் அரசு கல்லூரிகளிலும் உள்ளன என்பது கூடுதல் தகவல். தமிழகத்தின் நிலை: கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியது தமிழ்நாடு. 

கடந்த ஆண்டில் 1.08 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியதில் 54.40% பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பு ஆண்டில் 1.34 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதம் 51.30% ஆக குறைந்துள்ளது. அகில இந்திய வரிசையில் 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

. நீட் தேர்வு தேர்ச்சி விகிதம்

2018                  39.56% 
2019                  48.57% 
2020                  57.44% 
2021                  54.40% 
2022                  51.30%

 கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் விபரம்: கடந்தாண்டு தேசிய அளவில் 15,44,275 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 87,0074 பேர் தகுதி பெற்றனர்.தமிழகத்தில் 1,08,318 பேர் எழுதியதில், 58,922 பேர் தகுதி பெற்றனர் அரசு பள்ளி மாணவர்கள் 8061 பேர் எழுதியதில், 1957 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் 436 பேர் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களிலும், 104 பேர் பிடிஎஸ் மருத்துவ இடங்களிலும் சேர்க்கப்பட்டனர். 

 நடப்பாண்டில் ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வை நாடு தழுவிய அளவில், 18 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 1,32,167 பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் 51.3% பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி கடந்த ஆண்டை விட குறைந்தது தேர்ச்சி விகிதம். முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் தேர்வை எழுதினர். 

இதனால் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ இடங்களை பெறுவதற்கு அரசு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டி இந்த ஆண்டு ஏற்படும். நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் வழியில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

 கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மருத்துவ படிப்பிற்கான தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில், இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை பெற்று தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment