கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், 3ம் தேதிக்கு கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுஆயுதம் பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆயுத பூஜையம், 5ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் பட உள்ளன. 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே, பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், 3ம் தேதிக்கு கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3ம் தேதிக்கு பதில் அடுத்த வாரம் 8-ம் தேதி வேலை நாளாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment