ஜி.ஏ.டி.இ., - 2023 | G.A.T.E - 2023 - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 28, 2022

ஜி.ஏ.டி.இ., - 2023 | G.A.T.E - 2023

ஜி.ஏ.டி.இ., - 2023 



நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தகுதித் தேர்வு கிராஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங். 

  முக்கியத்துவம்:
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி துறையின் ஜி.ஏ.டி.இ., - தேசிய ஒருங்கிணைப்பு வாரியத்தின் சார்பாக, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை நடத்துகின்றன. அதன்படி, 2023ம் ஆண்டிற்கான தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கான்பூர் நடத்துகிறது. மேலும், இதனுடன் ஐ.ஐ.எஸ்சி.,-பெங்களூரு, ஐ.ஐ.டி.,- டெல்லி, ஐ.ஐ.டி.,- குவகாத்தி, ஐ.ஐ.டி.,- காரக்பூர், ஐ.ஐ.டி.,- சென்னை, ஐ.ஐ.டி.,- ரூர்க்கி ஆகிய கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன. முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக மட்டுமின்றி, பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான தகுதித் தேர்வாகவும் ஜி.ஏ.டி.இ., விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

  தகுதி: 
உரிய அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ச்சர், சயின்ஸ், காமர்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பின் 3ம் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

  தேர்வு முறை: 
இந்த தேசிய அளவிலான தேர்வு முற்றிலும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. இளநிலை பட்டப்பிடிப்பின் பாடப்பிரிவுகளில் ஒட்டுமொத்த புரிதலை பரிசோதிக்கும் வகையிலான கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடுத்த 3 மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். 

  பாடப்பிரிவுகள்:
ஏரோஸ்பேஸ், அக்ரிகல்ச்சர், ஆர்க்கிடெக்ச்சர் அண்டு பிளானிங், பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி, சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், என்விரான்மெண்டல் சயின்ஸ், மெக்கானிக்கல், மைனிங், மரைன், பெட்ரோலியம் உட்பட பல்வேறு இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள், கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ், லைப் சயின்சஸ், ஹுமானிட்டிஸ் மற்றும் சோயில் சயின்சஸ் ஆகிய தாள்களில் இத்தேர்வை மாணவர்கள் எழுதலாம். 

 விண்ணப்பிக்க கடைசி நாள்:
 செப்டம்பர் 30 

 தேர்வு நாட்கள்: 
பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 

 விபரங்களுக்கு:

No comments:

Post a Comment