கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது. Tamilan who sailed U. On the occasion of Chidambaranar's 151st birth anniversary, the movie "Kappalotiya Tamilan" was screened using modern technology. - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 5, 2022

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது. Tamilan who sailed U. On the occasion of Chidambaranar's 151st birth anniversary, the movie "Kappalotiya Tamilan" was screened using modern technology.

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளினை முன்னிட்டு அன்னாரின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். சென்னையில் அன்னாரின் திருவுருவச் சிலை நிறுவப்படும், ஒட்டப்பிடாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் மணிமண்டபத்திலும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். 

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து, அன்னாரின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (05.09.2022) காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நாள்: 05.09.2022 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், வாழ்க்கை வரலாற்றை அறிந்திடும் வகையிலும், சுதந்திரப்போராட்டத்திற்காக அவர் செயல்பட்ட வீரத்தையும், "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணித்த தியாகத்தையும் அனைவரும் அறிந்திடும் வகையில் இத்திரைப்படம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக காட்சியினை பள்ளி. 

கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். மேலும், நாளை (06.09.2022) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Tamilan who sailed U. On the occasion of Chidambaranar's 151st birth anniversary, the movie "Kappalotiya Tamilan" was screened using modern technology.

Hon'ble Chief Minister of Tamil Nadu has issued 14 new announcements in honor of the 150th birth anniversary of the great Tamilian V.U.Chitambaranar. A statue of Annan will be installed in Chennai, an audio-visual display will be set up at Annan's house in Ottapidaram and at Annan's Manimandapam in Tirunelveli so that everyone can know the life story of VA Chidambaranar.

They announced that the film depicting the life history of V.U. Chidambaranar will be screened and recreated in modern technology so that even the younger generation of today can know about it.

Following this, on behalf of the News and Public Relations Department, the movie "Kappalottiya Tamilan" depicting the life story of V.U. Chitambaranar, recreated in modern technology, was screened today (05.09.2022) at 10.30 am at the Kalaiwanar Arena, Chennai, on the occasion of Annan's 151st birthday. Date: 05.09.2022 This film is specially designed to tell the life history of the Tamilian V.U.Chitambaranar, his bravery for the freedom struggle and the sacrifice he made for the people's use of the shipping company "Sudeshi Nawaich Sangam". School this special show.

College students and the general public witnessed it. Also, it will be screened tomorrow (06.09.2022) at 10.30 am and 2.00 pm in modern mode (Digital) at Kalaiwanar Arena, Chennai. Admission is free. All are requested to observe.


No comments:

Post a Comment