நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்
உத்தேச விடைத்தொகுப்பு (Provisional Answer keys) தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் (Scanned Images of OMR Answer Sheet & Recorded Responses) இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்படும்
National Eligibility cum Entrance Test (UG) 2022 Results: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், உத்தேச விடைத்தொகுப்.பு (Provisional Answer keys) தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் (Scanned Images of OMR Answer Sheet & Recorded Responses) இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.
பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும்.
மேலும், OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் மதிப்பீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால், முகமைக்கு தேர்வர்கள் தெரியப்படுத்தலாம்.
ஒரு விடைக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதன்படி, விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வரின் OMR விடைத்தாள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நீட் தரவரிசைப் பட்டியல்:
அனைத்திந்திய தரவரிசை பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த 2018ம் ஆண்டு பொது பிரிவினருக்கு குறைந்தபட்சம் மதிப்பெண் விழுக்காடு(per centile) 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, தரவரிசைப் பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் பொது பிரிவு தேர்வரின் குறைந்த பட்ச மதிப்பெண் 119 - 691 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது.
பொது பிரிவினர்(50th per centile) ஓபிசி/எஸ்சி/எஸ்டி(40th Per centile)
2018 119 - 691 96 - 118
2019 134 - 701 107-133
2020 147 - 720 113 - 146
2021 138- 720 108 - 137
அதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர் வகுப்பினருக்கான 40% விழுக்காடாக குறைந்த பட்ச மதிப்பெண் 96 - 118 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது.
No comments:
Post a Comment