The 14th Wage Agreement for the Tamil Nadu Government Transport Corporation employees was signed by the Hon'ble Transport Minister Mr. It was finalized today (24.08.2022) under the leadership of Cha.C.Sivasankar.
செய்தி வெளியீடு எண்: 1455
நாள்: 24.08.2022
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான,
14ஆவது ஊதிய ஒப்பந்தமானது, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்
திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில்
இன்று (24.08.2022) இறுதி செய்யப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு
அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய
ஒப்பந்த ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையானது.
மாண்புமிகு போக்குவரத்துத்துறை
அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், தொழிலாளர் துறையை
சார்ந்த தொழிலாளர் தனி இணை ஆணையர், டாக்டர். உ.லட்சுமிகாந்தன் அவர்கள்
முன்னிலையில் இன்று (24.08.2022) குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக்
கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்துத்துறை
செயலாளர்
இக்கூட்டத்தில்
முதன்மைச்
டாக்டர்.கே.கோபால், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர், திரு. ஜி.கே.அருண்
சுந்தர் தயாளன், இ.ஆ.ப., ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்
செயலாளர் கூட்டுனர்
துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவு
செய்யப்பட்ட 66 பேரவை / தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, 14-வது
ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையானது இன்று நடைபெற்றது. கடந்த
பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டு, சில கோரிக்கைகள் இன்று முடிவு செய்யப்பட்டு ஊதிய
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்த சரத்துக்கள்
1. அடிப்படை ஊதிய நிர்ணயம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 01.09.2019 அன்று பணிபுரியும்
நிரந்தர தொழிலாளர்களுக்கு (Permanent Employees as on 01-09-2019)
கீழ்கண்டவாறு அடிப்படை ஊதியம் 01.09.2019 முதல் நிர்ணயம் செய்யப்படும்.
31.08.2019 அன்று அவர்கள் பெறுவந்த அடிப்படை ஊதியத்தை
பே-மேட்ரிக்ஸ்-ல் பொருத்தி, 5% உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை
ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
இடைக்கால நிவாரணம்
01.02.2021 முதல் ஏற்கனவே இடைக்கால நிவாரணத் தொகையாக மாதம்
ஒன்றுக்கு ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. 01.01.2022 முதல் 31.07.2022
வரையிலான காலத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணத் தொகை, புதிய ஊதிய
ஒப்பந்தப்படி வழங்கப்படவுள்ள 01.01.2022 முதல் 31.07.2022 வரையிலான
நிலுவைத் தொகையில் நேர் செய்யப்படும்.
குறைந்தபட்ச ஊதியம்
குறைந்தபட்ச ஊதிய உயர்வு பலன் ரூ.1000/- ஆக வழங்கப்படும். ஊதிய
உயர்வு பலன் கணக்கிடும்போது ரூ.1000/- க்குக் குறைவாக வரும்பட்சத்தில் அந்த
வித்தியாசத் தொகை ஒப்பந்த பலன் சம்பளப்படியாக (Settlement Benefit Protection
Amount) மாதாமாதம் வழங்கப்படும்.
2. மகளிர் இலவச பயணத்திற்கான வசூல் பேட்டா
மகளிர் இலவச பேருந்தில் ஏற்படும் வருவாய் குறைவினால் ஓட்டுநர் மற்றும்
நடத்துநர்களுக்கு வசூல்படியில் ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுசெய்து தற்போதுள்ள
வசூல் பேட்டா இரட்டிப்பாக வழங்க அரசு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
படிகள் உயர்வு
சலவைப்படி, தனிபேட்டா, ரிஸ்க் / ஷிப்ட் அலவன்ஸ், ஸ்டியரிங் அலவன்ஸ்,
ரீபில் அலவன்ஸ், இரவு பணிப்படி, இரவு தங்கல் படி ஆகியவை தொழிற்சங்கங்களின்
கோரிக்கையின்படி உயர்த்தப்பட்டுள்ளது.
3. நிலையாணை (Standing Order)
அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான
நிலையாணையை (Standing Order) நடைமுறைப்படுத்த அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
4. மலைவாழ்படி
மோட்டார் வாகனப் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தில், மலைப்பகுதி என்று
அறிவித்துள்ள இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மலைவாழ்படி மாதம்
ஒன்றுக்கு ரூ.1500/- என்பதை ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5. குடும்ப நல நிதி (Famlly Benefit Fund)
(ரூ.3.00 லட்சத்திலிருந்து ரூ.5.00 லட்சமாக உயர்த்துதல்)
தற்பொழுது ஒவ்வொரு மாதமும் ரூ.60/- பிடித்தம் செய்து இறந்த பணியாளரின்
குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.3.00 லட்சம் என்பது ரூ.5.00 லட்சமாக
உயர்த்தி, ஒவ்வொரு தொழிலாளியிடமும் மாதம் ரூ.110/- பிடித்தம் செய்யப்படும். இந்த
உயர்வு 01.09.2022 முதல் அமல்படுத்தப்படும்.
6. ஓய்வுதாரர் இலவச பயண அட்டை
அ) முந்தைய ஒப்பந்தத்தின்படி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக
தொழிலாளர்களுக்கும் அவர்கள் துணைவியருக்கும் வழங்கப்பட்டு வரும்
சலுகைக்கான இலவச பேருந்து பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும்.
ஆ) மேற்கண்ட சலுகையான இலவச பேருந்து பயண அட்டை இறந்த
தொழிலாளர்களின் துணைவியருக்கும் (Spouse) வழங்கப்படும்.
இ) மேற்கண்ட சலுகையான இலவச பேருந்து பயண அட்டை மருத்துவ
அடிப்படையில் விடுவிக்கப்பட்ட பணியாளர்களுக்கும் அவர்கள் துணைவியருக்கும்
(Spouse) வழங்கப்படும்.
7. கொரோனா காலக் கட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு ஊதியம்
வழங்குதல்
கடந்த கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு
ஊதியமாக ரூ.300/- (ஒரு பணிக்கு) வழங்கப்படும்.
8. தையற்கூலி
சீருடையுடன் தையற்கூலி ஆண்டொன்றுக்கு கீழ்க்கண்டவாறு உயர்த்தி
வழங்கப்படும்.
1. ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.300/- லிருந்து ரூ.400/- ஆக உயர்வு
2. பெண் தொழிலாளர்களுக்கு ரூ.250/- லிருந்து ரூ.300/- ஆக உயர்வு
3. மேற்பார்வையாளர்களுக்கு ரூ.300/- லிருந்து ரூ.400/- ஆக உயர்வு
9. வேலை நிறுத்த நாட்களை பணி நாட்களாக கருதுதல்
கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் 21 நாட்கள் நடந்த
வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு வராதவர்களுக்கு, அவர்கள்
பணிக்கு வராத காலங்கள் கீழ்கண்டவாறு முறைப்படுத்தப்படுகின்றன.
1.மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய
தற்காலிகப் பணி நீக்கக் காலம் மற்றும் பணிக்கு வராத காலம் பணிக் காலமாக
முறைப்படுத்தப்பட்டு, அக்காலத்தை பணி தொடர்ச்சிக்கு எடுத்துக்கொண்டு
ஆய்வு பலன் வழங்கப்படும்.
2. அவ்வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக போக்குவரத்துக் கழகப்
பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும்
கைவிடப்படுகின்றன.
10. ஒப்பந்த காலம்
இந்த ஒப்பந்தம் 01.09.2019 லிருந்து 31.08.2023 வரை நான்கு
ஆண்டுகளுக்கு அல்லது 1947ம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்ட
விதிகளின்படி இவ்வொப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை சட்டப்படியாக
செயல்பாட்டில் இருக்கும்.
***
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
The 14th Wage Agreement for Tamil Nadu State Transport Corporation employees was signed today (24.08.2022) under the chairmanship of S.C. Sivasankar, Hon'ble Transport Minister Mr.
Press Release No: 1455 Date: 24.08.2022 Press release
The 14th Wage Agreement for the Tamil Nadu Government Transport Corporation employees was signed by the Hon'ble Transport Minister Mr. It was finalized today (24.08.2022) under the leadership of Cha.C.Sivasankar.
As per the order of Hon'ble Tamil Nadu Chief Minister, 14th Wage Agreement for all Transport Corporation Employees of Tamil Nadu Government is the seventh phase of negotiation.
Honorable Minister of Transport Mr. Cha.C. Sivashankar, under the leadership of the Labor Department's Special Joint Commissioner of Labor, Dr. Today (24.08.2022) in the presence of U. Laxumikandan, the training was held at the Municipal Transport Corporation, Krombettai.
Transport Department Secretary Dr. K. Gopal, EAP, Finance Department Additional Secretary, Mr. GK Arun Sundar Dayalan, EAP, Member Secretary of the Wage Contract Negotiation Committee, Joint Committee Members and representatives from 66 registered Councils / Trade Unions were present.
Hon'ble Transport Minister told reporters after the talks:- According to the order of Hon'ble Tamil Nadu Chief Minister, the seventh phase of the 14th Wage Agreement was held today. Most of the demands of the unions were accepted in the last negotiation and some demands were fulfilled today and the wage agreement was finalized. Contract clauses agreed upon during wage contract negotiations
1. Basic Pay Fixation The basic pay will be fixed from 01.09.2019 as follows for the permanent workers (permanent employees on 01-09-2019) working in Tamil Nadu Government Transport Corporations on 01.09.2019. The new basic pay will be fixed after matching the basic pay received by them on 31.08.2019 in pay-matrix and giving 5% increment. Interim relief Rs.1000/- per month is already being given as interim relief from 01.02.2021. The amount of relief already paid for the period 01.01.2022 to 31.07.2022 will be paid as per the new wage agreement in arrears from 01.01.2022 to 31.07.2022. Minimum Wage The minimum wage increment benefit will be Rs.1000/-. In case the increase in salary is less than Rs.1000/-, then the difference amount will be paid as contractual benefit salary (settlement benefit security amount) monthly.
2. Vaasul Betta for Women Free Travel The Government has directed to double the existing Vaasul Betta to compensate the loss incurred by drivers and conductors due to loss of revenue in women free bus. Increase in steps Laundry Pay, Tanipeta, Risk / Shift Allowance, Steering Allowance, Rebill Allowance, Night Work Pay, Night Dangal Pay etc. have been increased as per the demands of the trade unions.
3. STATION (STATION DIRECTION) All steps will be taken to implement a single directive station (station order) in all transport corporations.
4. Under the Motor Vehicle Transport Labor Act, workers working in areas declared as hilly will be given Rs.1500/- to Rs.3000/- per month.
5. Family Benefit Fund (Increase from Rs. 3.00 lakh to Rs. 5.00 lakh) Presently Rs. 60/- to the family of the deceased employee with a deduction of Rs. 3.00 lakh per month will be increased to Rs. A deduction of Rs.110/- will be made. This hike will be implemented from 01.09.2022.
6. Pensioner Free Travel Card a) Free bus travel card will continue to be provided to retired Transport Corporation employees and their spouses as per earlier agreement. b) The above concession of free bus travel card will also be given to spouse (spouse) of the deceased. e) The above concession free bus travel card will be given to the employees and their spouses who are discharged on medical grounds.
7. Payment of Special Remuneration to Employees who have worked during the period All past employees will be paid a Special Remuneration of Rs.300/- (per work). 8. Tailoring uniform along with tailoring wages will be increased per annum as follows.
1. Increase from Rs.300/- to Rs.400/- for male workers
2. Increase from Rs.250/- to Rs.300/- for women workers
3. Increase from Rs.300/- to Rs.400/- for supervisors 9. Counting of strike days as working days is the person who participated in 21 days of strike action during last period 2011 to 2021 and did not turn up for work.
No comments:
Post a Comment