செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதையொட்டி, ஜூலை 28-ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஜூலை 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் சனிக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
The Tamil Nadu government has announced that schools in 4 districts of Chennai, Kanchipuram, Thiruvallur and Chengalpattu will function on Saturday (August 27) to make up for the local holiday announced on July 28 for the Chess Olympiad. The 44th International Chess Olympiad was held at Mamallapuram, Chengalpattu District.
The opening ceremony of the International Chess Olympiad was held on July 28 at the Nehru Indoor Stadium, Chennai. In this regard, on July 28, a local holiday was declared for Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu districts. To make up for this holiday, August 27 had already been declared as a working day.
According to this, the Tamil Nadu government has announced that schools in Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu districts will function on Saturday to make up for the July 28 holiday.
No comments:
Post a Comment