பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு | Postponement of engineering counselling - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 25, 2022

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு | Postponement of engineering counselling

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு



 நீட் தேர்வு முடிவு வெளிவராததால், பொறியியல் கல்லுாரி பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது, என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என, உயர்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், இதுவரை நீட் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தால் இன்று நடைபெற இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது.

 நீட் தேர்வு முடிவு வெளிவந்த பின், தேதி அறிவித்து, பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறும். இதுபோன்ற பிரச்னைகளுக்காகத் தான் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாமல், மாநில கல்விக் கொள்கை மட்டுமே வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

 கடந்த ஆண்டு போல அல்லாமல், இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரியில் முழுமையான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது, தமிழக அரசின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.


Postponement of engineering consultation


 Higher Education Minister Ponmudi said that as the NEET result is not out, the engineering college public consultation is being postponed. Yesterday in Villupuram, he told the reporters: It was announced by the higher education department that the engineering consultation will be held today.

However, due to the fact that the results of the NEET exam are not out yet, the engineering consultation scheduled to be held today has been postponed.

 After the announcement of NEET result, the date will be announced and engineering public consultation will be held. It is for such problems that we are insisting that the Tamil Nadu government should not accept the new education policy plan, but only the state education policy.

 Unlike last year, it is the intention of the Tamil Nadu government that the full seats in the engineering college should be filled this year. This was said by Minister Ponmudi.

No comments:

Post a Comment