Plus 1 Supplementary Exam 'Result' Today பிளஸ் 1 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்' - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 24, 2022

Plus 1 Supplementary Exam 'Result' Today பிளஸ் 1 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

Plus 1 Supplementary Exam 'Result' Today பிளஸ் 1 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், அரசு தேர்வுத்துறை நடத்தும், பிளஸ் 1 துணை தேர்வு, இந்த மாதம் முடிந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் 3:00 மணி முதல் மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம். 

தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும், 29, 30ம் தேதிகளில், உரிய கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் பெறுவோருக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, தனியாக வாய்ப்பு அளிக்கப்படும். மறுமதிப்பீடு தேவையில்லாதவர்கள், மறுகூட்டலுக்கு மட்டும் தற்போது விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு 205 ரூபாய்; உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். 

தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி விபரங்களை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

The results of Plus 1 supplementary examination will be released today. Press release issued by the Director of Government Examination Department Sethurama Verma: In Tamilnadu school curriculum, Plus 1 supplementary examination conducted by Government Examination Department has ended this month. The results will be announced today. You can check the score details on the website www.dge.tn.gov.in from 3:00 PM today. Download the mark sheet using exam number and date of birth. 

Those who want to apply for a copy of the answer sheet and for revaluation should pay the appropriate fee in cash at the office of the Assistant Director of District Government Examinations on the 29th and 30th. A separate opportunity will be given to apply. Those who do not require revaluation can now apply for revaluation only. 275 per subject for copy of answer sheet; 205 per subject for reconstitution; 

305 rupees fee only for biology course. The admit card issued at the time of application should be kept safe. A copy of the answer sheet can be downloaded from the website www.dge.tn.nic.in on the day of announcement by the examination department using the exam number and date of birth details, it said.

No comments:

Post a Comment