கணிதமும், கணினியும்
பெங்களூருவில் செயல்படும் ஐ.ஐ.எஸ்சி., என அழைக்கப்படும் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பி.டெக்.,- மேத்மெடிக்ஸ் அண்டு கம்ப்யூட்டிங் என்று புதிய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை அறிவியல் பங்களிப்புகள் மற்றும் அதன் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை சமூக நலனுக்காக பயன்படுத்துவதில் வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், மாறுபட்ட மற்றும் வாய்ப்புகள் மிகுந்த படிப்புகளை சிறந்த பாடத்திட்டத்துடன் வழங்குவதிலும் பிரபலமானது.
அந்தவகையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பி.டெக்., - கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங் படிப்பு கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டேட்ட சயின்ஸ் ஆகியவற்றின் ஆழமான பயன்பாட்டை கொண்டுள்ளது.
படிப்பின் நோக்கங்கள்:
* எதிர்காலத் துறைகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் சிறப்பாக செயல்படும் நிபுணர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இளநிலை பட்டப்படிப்பு நிலையில், கணிதம், கணக்கீடு மற்றும் தரவு அறிவியலில் வலுவான அடித்தளத்தை இப்படிப்பின் வாயிலாக வழங்குவதன் மூலம் மகத்தான வாய்ப்புகள் கண்டறியப்படும்.
* கல்வி மற்றும் தொழில்துறை இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். பல்துறை பாடத்திட்டத்தை உள்ளடக்கிய இந்த படிப்பின் வாயிலாக, கல்வி நிறுவனத்தின் பல்வேறு துறை நிபுணர்களின் பங்களிப்பு சாத்தியமாகிறது.
பாடத்திட்டம்:
கணிதம், கம்ப்யூட்டிங், இ.இ.சி.எஸ்., ஹுமானிட்டீஸ் ஆகிய முக்கிய பாடங்களுடன், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதர பாடங்களை தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மொத்த இடங்கள்:
52
கல்வி கட்டணம்:
பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணத்துடன் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய் முதலாம் ஆண்டில் செலுத்த வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவினர்களுக்கு கல்வி கட்டணமான 2 லட்சம் ரூபாய் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதர கட்டணம் 20 ஆயிரத்து 200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
கல்வித் தகுதி:
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு -2022 தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 13
No comments:
Post a Comment