முக்கிய பதவிகளில் இந்தியர்கள்! அமெரிக்காவில் புதிய சாதனை | Indians in important posts! A new record in America - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 27, 2022

முக்கிய பதவிகளில் இந்தியர்கள்! அமெரிக்காவில் புதிய சாதனை | Indians in important posts! A new record in America

முக்கிய பதவிகளில் இந்தியர்கள்! அமெரிக்காவில் புதிய சாதனை



 அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அரசில் முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன. ரொனால்டு ரீகன் 1981 - 1989ல் அதிபராக இருந்தபோது முதல் முறையாக இந்தியர் ஒருவர் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டார். பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது 60 இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. 

 அவரைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பதவியேற்றபோது 80க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர். கடந்த 2021ல் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில் 130க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிக்கின்றனர்.

 'இன்டியாஸ்போரா' என்ற அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான அமைப்பு அமெரிக்காவில் முக்கிய பதவிகளில் உள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளது. அதன்படி துணை அதிபர் கமலா ஹாரிசில் துவங்கி அமெரிக்க நிர்வாகத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் இந்தியர்கள் உள்ளனர். 

''இது சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்'' என பிரபல தொழிலதிபரும் இன்டியாஸ்போரா அமைப்பின் தலைவருமான எம்.ஆர்.ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பார்லிமென்டில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நான்கு இந்தியர்கள் உட்பட மாகாண பிராந்திய அரசுகளில் 40 இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர்.

 இதைத் தவிர கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா உட்பட 20க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர்.

Indians in important posts! A new record in America


 Foreign nationals living in the United States are often given important positions in the government. When Ronald Reagan was president from 1981 to 1989, an Indian was appointed to a government post for the first time. 60 Indian Americans were given top positions during Barack Obama's presidency.

 When he was succeeded by Donald Trump, there were Indians in more than 80 key positions. More than 130 important positions in the administration of Joe Biden, who was sworn in as the President of the United States in 2021, are decorated by people of Indian origin.

 Indiaspora, a US-based organization for Indians living abroad, has compiled a list of Indians in key positions in the US. Accordingly, there are Indians in all major departments of the US administration, starting with Vice President Kamala Harris.

"This is a recognition for Indians who work with a spirit of service," noted M.R. Rangasamy, a famous businessman and president of Indiaspora. There are 40 Indian Americans in provincial and territorial governments, including four Indians in the House of Representatives in the US Parliament.

 Apart from this, there are Indians at the helm of more than 20 American companies, including Google CEO Sundar Pichai and Microsoft CEO Satya Nadella.

No comments:

Post a Comment