'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் | Highlights of 'Naan Muthalvan' website - Minnalseithi

Latest

Search This Blog

Monday, August 29, 2022

'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் | Highlights of 'Naan Muthalvan' website

'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் என்ன? 


நான் முதல்வன் திட்டம்நான் முதல்வன் திட்டம் கல்லூரி பயிலும் காலத்திலேயே IIT, NPTEL, CISCO, Coursera, Autodesk, Mathworks போன்ற உலகத் தரம் வாய்ந்த சான்றிதழ்களை பெறும் வாய்ப்பை இந்த இணையதளம் உருவாக்கித் தரும். நவீன பாடப்பிரிவுகளை கல்லூரிப் படிக்கும் போதே வழங்கிடும் விதமாக, நான் முதல்வன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை கலைவானர் அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 'நான் முதல்வன்' என்ற இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். 

 சிறப்பம்சங்கள்: 

 இந்த இணையதளம் உயர்கல்வி குறித்த தெளிவான, சீரான தகவல்களை வழங்கும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தாண்டி பல்வேறு துறைசார் படிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். இந்த இணையதளத்தில் திறனறிவு தேர்வு (Psycho Metric Test) வசதிஉள்ளது. இந்த தேர்வு, மாணவர்களின் உளவியல் பண்புகளை ஆராய்ந்து, அவர்களின் தனித்திறனை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைக்கும். 

 இந்த இணையதளத்தின் வாயிலாக, நவீனத் தொழில் நிறுவனங்களில் சேர தேவைப்படும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை மாணவர்கள் பெறுவர். இந்த இணையதளம் மூலம் Robotics, Virtual Reality, oracle, Machine learning, Cloud Computing, Artificial Intelligence, Cyber Security, Internet of Things போன்ற நவீன கூடுதல் பிரிவுகளை இலவசமாகவும், மிகக் குறைவான கட்டணத்தில் பயிலும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

 போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது குறித்த பயிற்சிகள் இந்த இணைய தளத்தில் வழங்கப்படும். கல்லூரி பயிலும் காலத்திலேயே IIT, NPTEL, CISCO, Coursera, Autodesk, Mathworks போன்ற உலகத் தரம் வாய்ந்த சான்றிதழ்களை பெறும் வாய்ப்பை இந்த இணையதளம் உருவக்கித் தரும்.

What are the highlights of 'Naan Muluvan' website?


Naan Mootuvan Scheme Nao Mootuwan Scheme This website will create an opportunity to get world class certifications like IIT, NPTEL, CISCO, Coursera, Autodesk, Mathworks while studying in college. Tamil Nadu Chief Minister M. K. Stalin has said that Na Muluvan website has been launched to provide modern courses while studying in college.

 Chief Minister M. K. Stalin today inaugurated the massive skill development program under Nan Mootuvan scheme at Kalaiwanar Arena in Chennai. The Chief Minister also launched the website 'Naan Muluvan' at the event.

 Highlights:

 This website provides clear and consistent information on higher education. It will create awareness among the students about various disciplinary courses beyond medical and engineering courses. This website has the facility of Psychometric Test. This test will analyze the psychological characteristics of the students, know their individuality and suggest exercises accordingly.

 Through this website, students will get details about the courses required for admission in modern industrial institutes. Through this website, college students will be given the opportunity to study advanced courses like Robotics, Virtual Reality, oracle, Machine learning, Cloud Computing, Artificial Intelligence, Cyber ​​Security, Internet of Things etc. for free and at a very low cost.

 This website will provide tutorials on preparation for competitive exams. This website provides an opportunity to get world class certifications like IIT, NPTEL, CISCO, Coursera, Autodesk, Mathworks etc. during your college days.

No comments:

Post a Comment