இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் வழிகாட்டல் வீடியோ வெளியீடு | General Counseling Guidance Video Publication of Engineering - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 31, 2022

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் வழிகாட்டல் வீடியோ வெளியீடு | General Counseling Guidance Video Publication of Engineering

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் வழிகாட்டல் வீடியோ வெளியீடு 



 இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கில், கல்லுாரிகளை ஆன்லைன் முறையில் தேர்வு செய்வது குறித்த, வழிகாட்டல் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வித்துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

 இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில், 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம், 443 கல்லுாரிகளில், 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து விட்டது. &'நீட்&' தேர்வு முடிவு தாமதத்தால், பொது கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செப்., 7ல் நீட் தேர்வு முடிவு வருகிறது. 

இதையொட்டி, பொது கவுன்சிலிங் நடவடிக்கைகள், செப்., 10ல் துவங்க உள்ளன. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு, நவ.,13ல் முடிகிறது. முதல் சுற்று செப்., 10; இரண்டாம் சுற்று செப்., 25; மூன்றாம் சுற்று, அக்., 13; நான்காம் சுற்று அக்.,29ல் துவங்குகிறது. ஒவ்வொரு சுற்றிலும், மாணவர்களின் தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 நவ., 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது.ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்ய இரண்டு நாட்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாட்கள்; கல்லுாரிகளில் சேர ஒரு வாரம் என, 11 நாட்கள் ஒதுக்கப்படுகின்றன.

 இந்நிலையில், ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வி துறை சார்பில் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது. தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின்,www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில், இந்த வீடியோ இணைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 

கவுன்சிலிங்குக்கு முன், மாணவர்கள் வீடியோக்களை பார்த்து, தங்களின் கவுன்சிலிங் நடவடிக்கைகள் குறித்து, முன்கூட்டியே தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

General Counseling Guidance Video Publication of Engineering


 General Counseling for Engineering has released a video guide on online selection of colleges. The Directorate of Technical Education conducts Online Counseling for the students who have completed Plus 2, to study BE, - B.Tech in Engineering Colleges affiliated to Anna University on behalf of Higher Education Department of Tamil Nadu.

 1.59 lakh people are going to participate in this year's counselling. In total, 1.50 lakh seats are to be filled in 443 colleges. Counseling for special category students is over. Due to delay in result of &'NEET&' examination, general counseling has been postponed. The result of NEET will come on 7th September.

In this regard, the general counseling activities will start on September 10. The counseling will be conducted in four rounds and will end on November 13. First Round Sept. 10; Second Round Sept. 25; Third Round, Oct. 13; The fourth round starts on Oct. 29. In each round, the list of students is published to participate according to their rank.

 Supplementary Counseling will be held from Nov 15 to 20. In online counselling, students have two days to register their preferred colleges and courses; Two days to finalize provisional allotment; As a week, 11 days are allotted for admission in colleges.

 In this case, a video has been released on behalf of the Higher Education Department to guide students on how to carry out online counseling procedures. These video links have been uploaded on the website of Tamil Nadu Engineering Counseling Committee, www.tneaonline.org.

Before counselling, students are advised to watch the videos and familiarize themselves with their counseling activities in advance.

No comments:

Post a Comment