மாணவர்களை போல் சீருடை, சம்பளத்தில் 80 சதவீதம் கல்விக்காக செலவு.. யார் இவர்?
நல்லாசிரியர் விருது பெறும் ராமசந்திரன்..
நல்லாசிரியர் விருது பெறும் ராமசந்திரன்..
நல்லாசிரியர் விருது பெறும் ராமசந்திரன்..!
நல்லாசிரியர் விருது பெறும் ராமசந்திரன்..
நல்லாசிரியர் விருது பெறும் ராமசந்திரன்..!
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் செம்பொன் குடி கிராமத்தில் 2-6- 1982 அன்று தந்தை காமாட்சி, தாய் பெத்தாயி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்திருக்கிறார் ராமச்சந்திரன். இவன் உடன் பிறந்தவர்கள் அண்ணன், அக்கா இருவர். ராமச்சந்திரனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ராமச்சந்திரன் குடும்பம் விவசாயி குடும்பமாகும்.
இவர் தொடக்கப் பள்ளியை அவரது சொந்த ஊரான செம்பொன்குடி தொடக்கப் பள்ளியிலேயே படித்து வந்துள்ளார். அதன் பிறகு 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு திருவரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளார். படித்த முடித்த பிறகு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
அந்த வருடம் (1999-2000) குடும்ப வறுமையின் காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை செய்துள்ளார்.
அதன் பின்பு 2000 முதல் 2002 வரை மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம் கிடைக்க பெற்று ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்பு பணி கிடைக்காததன் காரணமாக 2002 முதல் 2005 வரை திருப்பூரில் வேலை செய்துள்ளார்.
அதன் பிறகு 2005-y; ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பணி செய்து கொண்டு பிஎஸ்சி கணிதம், பி எட், எம்எஸ்சி கணிதம் அனைத்தையும் படித்து முடித்தார்.
இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யூனிவர்சிட்டியில், பிஎட் படித்து முடித்தார்.
பிஎஸ்சி மற்றும் எம் எஸ் சி படிப்பினை பரமக்குடி மாலை நேர கல்லூரியில் படித்து முடித்தார். அதன் பிறகு 2006 இல் போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளியில் பணி மாறுதல் செய்யப்பட்டு 2008இல் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளியில் பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது வரை அப்பள்ளியில் பணி செய்து வருகிறார்.
கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
ராமசந்திரன் மகனும் தந்தை படித்த பள்ளியான செம்பொன்குடி அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். இவருடைய அக்கா முத்துலட்சுமிக்கு அவரது பெயரை கூட முழுமையாக எழுத தெரியாது என்று அவர் தெரிவித்தார். அதற்காகவே ஏழை எளிய மக்களை படிப்பின் மூலம் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இவர் தாம் பணிபுரிந்து வரக்கூடிய கீழாம்பல் பள்ளியில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
தான் வாங்கக்கூடிய சம்பளத்தில் 80% பள்ளிக்கும் மாணவர்களுக்காகவே செலவழித்துக் கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் கிளாஸ், மாணவர்களுக்கு கைப்பேசி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்து படிக்க வைத்து வருகிறார். மாணவர்கள் எல்லோரும் சஞ்சலப்படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அணியக்கூடிய யூனிஃபார்ம் தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது கிடைத்துள்ள தேசிய நல்லாசிரியர் விருதினை அரசு பள்ளி மாணவர்களுக்காகவே சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,தான் பெற்ற இந்த விருதை செப்டம்பர் 5ஆம் தேதி பெற்றுக் கொள்ளும் நாளில் அவர் அரசு மாணவர்களின் யூனிபார்ம் அணிந்துதான் வாங்கப் போவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment