சுதந்திர திருநாளையொட்டி 15.8.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை | On the occasion of Independence Day 15.8.2022) Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin's speech by hoisting the national flag - Minnalseithi

Latest

Search This Blog

Monday, August 15, 2022

சுதந்திர திருநாளையொட்டி 15.8.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை | On the occasion of Independence Day 15.8.2022) Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin's speech by hoisting the national flag

சுதந்திர திருநாளையொட்டி 15.8.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை 


On the occasion of Independence Day Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin's speech today (15.8.2022) by hoisting the national flag in front of the Chief Secretariat Fort, Chennai

சுதந்திர திருநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2022) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை 
மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே! மாண்பமை நீதியரசர் அவர்களே! மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே! தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே! காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட காவல் அதிகாரிகளே! சிறப்பு விருந்தினர்களே! விடுதலைப் போராட்டத் தியாகிகளே! அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களே! 

பல்வேறு விருதுகளைப் பெறுவதற்காக வருகை தந்திருக்கக்கூடிய பெரியோர்களே! தாய்மார்களே! அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம் நமது இந்திய நாடு, ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-ஆவது ஆண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது! நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை, போராளிகளைக் கண்டிருக்கிறது! அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது! 


அத்தகைய மூவண்ணக் கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். நாட்டு மக்களை வணங்குகிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் ஒருமைப்பாட்டு விழுமியங்களை வணங்குகிறோம். மூவண்ணக் கொடிக்கு முன்பு அணி அணியாய் அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்! 75 ஆண்டுகளாக விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை இந்த இந்தியத் துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். 1600-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ஆம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன். 

• சிவகங்கைக்கு அருகிலுள்ள பனையூரைச் சேர்ந்த மண்டியிடாத மானப்போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. • 'தானம் கேள் தருகிறேன் வரி என்று கேட்டால் தர மாட்டேன்' என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799. தூக்குமேடைக்குச் செல்லும்போது கூட தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்தபடியே கட்டபொம்மன் சென்றதாக அன்றைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் அவர்களுக்கு தளபதி பானர்மென் எழுதிய கடிதம் சொல்கிறது. 

• கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவரது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவர். காளையார்கோவில் தாக்குதலில் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதும், சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி தன்னைப் போன்ற விடுதலைத் தாகம் கொண்டவர்கள் அனைவரையும் அணிசேர்த்து விடுதலைப் படை அணி கட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார். பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார். 

 தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவர் குயிலி. 

• சின்னமருதுவும் பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு! • 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை' என்று சொல்லி மறைந்து இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அந்த மாவீரன் தூக்குமேடைக்கு சென்ற ஆண்டு 1805! அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 • 1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு பயம் என்றால் என்னவென்று காட்டப்பட்டது. நான் சொன்னவை அனைத்தும் 1857-ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை.  

1857 சிப்பாய் புரட்சியைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவைதான் இவை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும் போது தமிழனாக பெருமைப்படும் உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம். அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண், நம்முடைய தமிழ் மண்! "இருநூறு ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல்" என்று சொன்ன திப்பு சுல்தானின் தீரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டிருந்த மண், நம்முடைய தமிழ் மண்! வ.உ.சிதம்பரனார் செலுத்திய கப்பலும் சுப்பிரமணிய சிவாவின் பேச்சும் பாரதியின் பாட்டும் ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. நடத்திய பத்திரிகையும் பெரியார் விற்ற கதர் ஆடைகளும் செண்பகராமன் - வீர வாஞ்சி நாதன் போன்றோரது போராட்டங்களும் பீரங்கியால் மார்பு பிளக்கப்பட்ட நிலையிலும் நெஞ்சுயர்த்தி நின்ற அழகு முத்துக்கோனின் வீரமும் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடிய காந்தியச் செம்மல் நாமக்கல் கவிஞரின் தமிழும் தன் போராட்டங்களால் ஆங்கிலேய அரசை உலுக்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் ஆற்றலும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் கண்டு கொதித்தெழுந்த அவரது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்" நூலைத் தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் மூலமாக வெளியிட்டதற்காகச் சிறைக் கொடுமை அனுபவித்த பொதுவுடைமைப் போராளி தோழர் ஜீவாவின் தியாகமும் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு எனப் போராட்டக் களங்கள் கண்டு, கொல்கத்தா, வேலூர் என பல மாதங்கள் சிறையில் கழித்த கர்மவீரர் காமராசரின் நாட்டுப்பற்றும் காந்தியின் ‘யங் இந்தியா' இதழின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்ட பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவின் காந்தியப் பற்றும் – அண்ணல் அம்பேத்கரோடு வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் உழைப்பும்- இந்திய நாட்டின்மீதும், தமிழ் மொழியின் மீதும் கொண்டுள்ள பற்றில் இணையற்றவராகவும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் வழிகாட்டுதலும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தமிழ்நாட்டில் இருந்து பெரும்படையை அனுப்பி வைத்த பசும்பொன் ஐயா முத்துராமலிங்கம் அவர்களின் தீரமும் உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் என தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை ஏகிய ஐயா ஜமதக்னி அவர்களின் உணர்வும் மூதறிஞர் இராஜாஜி நடத்திய பயணங்களும் திருப்பூர் குமரன் தூக்கிப் பிடித்த கொடியும் இணைந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் விடுதலைக் காற்று. 

அதனால்தான் தியாகத்தைப் போற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது. 

• 1962-ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்! 

• 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்! 

• 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்! அன்றைய நாள் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் ரூபாய் 25 கோடி! அதில் ரூபாய் 6 கோடியை வழங்கியது கலைஞர் ஆட்சி! 

● அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய ஆட்சி கலைஞரின் ஆட்சி! 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் முதல் தவணையாக, இரண்டாவது தவணையாக மூன்றாவது தவணையாக என மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய ஆட்சி முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி! இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். நாட்டுக்காகப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் இறக்க நேரிட்டால், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கக்கூடிய திட்டம் 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது வெளியிடுவதில் பெருமையடைகிறேன். 

Press Release No : 1411 Date: 15.08.2022 Press release On the occasion of Independence Day Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. G. Stalin They are today (15.8.2022) in front of Chief Secretariat Fort, Chennai National flag hoisting speech Honorable Speaker of the Legislative Assembly! Your Honor! Hon'ble Minister of Tamil Nadu! Members of parliament and assembly! Government officials including the Chief Secretary! Police officers including the Chief of Police! Special guests! Martyrs of the freedom struggle! Those who belong to their families! Seniors who may have attended to receive various awards! Ladies and Gentlemen! Dear students! My warm regards to all of you Our Indian country, from the British colonial rule We are now celebrating the 75th anniversary of Independence We are celebrating. This is the liberation achieved by the selfless sacrifice of innumerable martyrs! Our history has seen so many martyrs and fighters! Ours is the history of overcoming all the fires with non-violence! 1We worship the country by worshiping such a tricolor flag. We worship the people of the country. We worship the values ​​of integrity that save the country and its people. My warm greetings to all those marching as a team before the tricolor flag! I pay my respects to all the heroes who have breathed the air of freedom for 75 years. I bow to the direction where such martyrs live and their families live. I wish not only the people of Tamilnadu but all the people of India on their Independence Day. Although the joy I feel as the Chief Minister of Tamil Nadu when hoisting the tricolor flag on the tower of the great fort is one side, the emotion and joy I feel as a Tamil is not equal to the feeling and joy I feel as a Tamilian. In 1755, Nelkattanjeval Pulithevan said that if the East India Company established a foothold in India in 1600, they would not be able to pay you a single penny of tribute. 

 • The brave warrior Kansagib Marudhanayakam from Panaiyur near Sivaganga was killed in the year 1764. • Kattabomman was the hero who said 'I will give you alms and I will not give you taxes'. He was hanged in 1799. A letter written by Commander Bannermen to the then Governor Edward Clive says that Kattabomman went to the gallows smiling at his betrayers. • Mahaveeran Sundaralingam was the commander of Kattabomman's entire army. His uncle's daughter Vadivu was the one who carried out the suicide attack. When her husband Muthuduganathar was killed in the attack at Kalaiyarko, Veeramangai Velunachiar was the one who came out as a vengeful vengai and formed the Liberation Force by gathering all those who thirsted for freedom like her.

 It was Velu Nachiyar who restored Sivagangai from British rule after eight years of war and became its queen again. Quilly was the one who set fire to his suit and attacked the British armory. • Chinnamaru and Peiri Marudu were sworn in by Valari before the cannons. The British officer Colonel Welsh wrote that the cannons would slide in front of the wall they had! It was 1801! 

• Theeran Chinnamalai who disappeared and still lives as a great mountain in history saying 'A Chinnamalai between Chennimalai and Shivanmalai'. The knight went to the gallows in 1805! Commander Pollan of his army and unit was shot dead by the British. • In 1806 the British army was shown what fear means at Vellore Fort. All that I have said happened before 1857. Some say that the Sepoy Revolution of 1857 was the first Indian War of Independence. These are the things that happened in the south and in Tamil Nadu before that. This is the reason why the feeling of pride as a Tamil when standing at Fort St. George and hoisting the flag is felt. 

What started as slavery, the soil that raised the slogan of liberation on that day, is our Tamil soil! Tipu Sultan's soil that had brave soldiers who said "It is better to live as a tiger for two days than to live like a goat for two hundred years" is our Tamil soil! The ship sent by V.U.Chitambaranar and the speech of Subramania Siva and the song 'Tamilthenral' by Bharti by Mr.V.K. The magazine he ran and the Khadar clothes sold by Periyar, the struggles of Senpakaraman - Veera Vanchi Nathan, the bravery of the beauty Muthukon who stood tall even though her chest was split open by a cannon, the Tamil poet Gandhi Semmal Namakkal who sang that a war is coming without a knife and bloodless, the power of the thinker Singaravelar who shook the British government with his struggles, and the power of the thinker Singaravelar, who shook the British government with his protests, was enraged by the death sentence given to Bhagat Singh. Comrade Jiva's martyrdom and salt satyagraha in Vedaranyam, who suffered imprisonment for translating the book "I have become an atheist" in Tamil and published it through Father Periyar, Karmaveer Kamarasar, who spent several months in jail in Kolkata and Vellore, became the editor of Gandhi's 'Young India' magazine. 

Along with his work, the Gandhian attitude of economist J.C. Kumarappa, who was jailed for over a year for participating in the Quit White movement – The efforts of grandfather Redtaimalai Srinivasan, who participated in the Round Table Conference with Annal Ambedkar, the guidance of the dignified Theral Kaithe Millat, who lived as an example to all for his attachment to the Indian country and the Tamil language, and the determination of Pasumpon Aya Muthuramalingam, who sent a large force from Tamil Nadu to Netaji's Indian National Army, continued as salt satyagraha and lawlessness movement. Iya Jamadagni, who was imprisoned in the protests and the journeys made by the sage Rajaji, turnedThe freedom we breathe today is due to the union of the flag held by Ur Kumar. That is why the Dravida Munnetra Kazhagam government has always been at the fore in glorifying sacrifice. The Dravida Munnetra Kazhagam has always been committed to nationalism. 

 • When India was threatened by China in 1962, it was Anna who declared that the security of India is important! • When Pakistan threatened India in 1971, it was Chief Minister Kalainar who passed a resolution condemning Pakistan's invasion in the Tamil Nadu Legislative Assembly! • During the 1972 Pakistan war, Chief Minister Kalainar was the one who gave six crore rupees to the then Prime Minister Indira Gandhi for national security! The total amount given by all the states on that day was 25 crore rupees! Of which Rs 6 crore was provided by the artist's regime!

 ● The reign of the artist who gave funds and land to the soldiers who died in that war! During the Kargil war in 1999, the Prime Minister of the day Vajpayee was given a total of 50 crore rupees in three installments as the first installment, the second installment and the third installment. We are providing monthly financial donation for martyrs to 1,095 Indian freedom fighters. Since 1966, Tamil Nadu has been implementing a scheme to provide family pension to freedom struggle martyrs and their heirs in case of their death to honor the martyrs who fought for the country. Accordingly, I am now proud to make some announcements that will add extra specialness to the celebration of Coral Jubilee of Indian Independence.

No comments:

Post a Comment