அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் 10,000 vacant teaching posts in government schools to be filled soon: Minister Anbil Mahes informs - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 19, 2022

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் 10,000 vacant teaching posts in government schools to be filled soon: Minister Anbil Mahes informs

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் 

அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னைதலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கல்வி தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி வரும் தகவல் உண்மையாக இருந்தால், ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அதில் முதுநிலை ஆசிரியர்பணி நியமனம் செப்டம்பருக்குள் முடிக்கப்படும்.படிப்படியாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.

10,000 vacant teaching posts in government schools to be filled soon: Minister Anbil Mahes informs

Minister Anbil Mahes said that steps will be taken to fill more than 10 thousand teaching vacancies in government schools. A review meeting of the Tamil Nadu School Education Department was held yesterday at the Chief Secretariat, Chennai under the chairmanship of Minister Anbil Mahesh Poiyamozhi. Commissioner of School Education K. Nandakumar and Departmental Directors and Associate Directors participated in this.

Later, the Minister told the media that Manikandan Bhupathi, who was selected as the Chief Executive Officer (CEO) of Education Television, has been temporarily suspended. If the information received about him is true, an eligible person will be selected and appointed from among those who have already applied. There are more than 10 thousand teaching vacancies in government schools. The appointment of senior teaching post will be completed by September. Other teaching posts will also be filled gradually.

No comments:

Post a Comment